Breaking News

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு..

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு..

கடந்த 15/12/2019 அன்று கர்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பளளியில் நடைபெற ஆண்டு விழாவில்,

1992ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபாி மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் மேதகு.கிரண்பேடி மற்றும் மத்திய ராசயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் கலந்துகொண்டு அந்நிகழ்வை ஊக்குவித்துள்ளனா்.

இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இச்செயல் மாணவா்களிடம் மதவெறுப்பை தூண்டி,சட்டம் ஒழுங்கை கெடுத்து, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.உயர் பதவியில் இருக்கும் இவர்கள் இருவரும் அரசியல் அமைப்பு சட்டத்தை குலைக்கும் வகையிலும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும்
செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள்.

இன்று 17/12/2019 மாலை புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் மனு அளித்தனர்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *