Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டிசம்பர் 16,2019.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட செயலாளர் பசீர் ஒளி,மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொலி செய்யதலி, விஷ்வை அப்துல் காதர்,கடையநல்லூர் பாஸித், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்ட செயலாளர் அகமதுஷா மற்றும் தோழமை இயக்க கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட,நகர,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். தென்காசி நகர செயளாலர் ஜாபர் உசேன் நன்றியுரை ஆற்றினார்.

Check Also

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *