Breaking News

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்

பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் “உரிமை மீட்பு போராட்டம்” தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் (எ) கோரி முஹம்மது தலைமையில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தோழர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தோழர் சிந்தனை செல்வன், திராவிட விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி மன்சூர் காஷிபி,பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கிருஸ்துவ நல்லிணக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கும், தமுமுக தொண்டர்களும் கலந்துக்கொண்டு கோஷங்களை எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *