Breaking News

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம் சுற்றுச் சுவரை கட்டியவர்களை கைது செய்ய வேண்டும்!!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம்
சுற்றுச் சுவரை கட்டியவர்களை  கைது செய்ய வேண்டும்!!
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில்  ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளருக்கு சொந்தமான இடம் நடூரில் உள்ளன.  இந்த இடத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்  பாதுகாப்பில்லாத நிலையில் சரியான அடித்தளம் அமைக்காத வகையில் கட்டப்பட்டிருந்த்தாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். . இந்த பலமில்லாத சுற்றுச்சுவர் கன மழையில் நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீடுகளில் 17 பேர் தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருக் கின்றார்கள்.

இந்த உயிர் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும்  இடிந்த இந்த சுவரின் தொடர்ச்சியாக பலர் எழுப்பியுள்ள சுற்றுச் சுவர் தீண்டாமை மனப்பான்மையின் காரணமாகவே எழுப்பப்பட்டது என்று அப்பகுதியில் வாழும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இது தீண்டாமைச் சுவர் என்று அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு போராட்டம் நடத்தி அரசு அலுவலர்களிடம் புகாரும் அளித்துள்ளார்கள். இந்த சுற்றுச்சுவரினால் அந்தப்பகுதியில் வாழ்ந்த தலித் மக்கள் குடியிருப்புகளுக்கு மழைகாலத்தில் மிகப் பெரிய சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றது.  இது தீண்டாமை சுவர் என்று அருந்ததியர் மக்கள் போராட்டம் நடத்தியும் புகார் அளித்தும் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றேன். அரசு அறிவித்துள்ள 4 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *