Breaking News

விழுப்புரம் மாவட்டம், வடவானூர் வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

விழுப்புரம் மாவட்டம்,  வடவானூர்   வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
Fire-accidentjpeg
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், வடவானூர் என்ற கிராமத்தில் 30.9.2019 காலை 8 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வேன் வெடித்து விபத்துக்குள்ளானதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த திரு. இளங்கோ மற்றும் திரு. சாய்பாபா என்ற இருவரும் அப்பகுதியில் டீ கடை நடத்தி வந்த சாதிக் பாஷா என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவ்வழியாகச் சென்ற சிறு குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 12 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விபத்தினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்து கடுமையாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர், நான்கு சக்கர சரக்கு வாகனத்தில், வெடி மருந்துகளுடன் கூடிய பட்டாசு பொருட்களை ஏற்றிச் செல்வதைக் கண்காணிக்காதது கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக அரசு இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!

தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *