Breaking News

தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
ஹஜ் பெருநாள் என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவுக்கு கொள்ளும் வகையில் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதே தருணத்தில் உலகமெங்கிருந்தும் புனித மக்கா நகருக்குச் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள் சிறுவயது முதல் ஏக இறைவனை வணங்கும் பண்புடையவராக விளங்கினார்கள். இதன் காரணமாக அவர்கள் பல்வேறு சோதனைகளைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சியாளர்களைத் தனித்து துணிச்சலாக எதிர்த்து நின்று சாதனை  படைத்தார்கள். இதே போல் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்குப் பிறந்த மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட வேண்டும் என்று இறைக்கட்டளை வந்த போது தந்தையும் மகனும் அந்த உயரிய தியாகத்திற்குத் தயாராகி இறைவன் வைத்த சோதனையில் வெற்றியை பெற்றார்கள்.  இஸ்மாயீலுக்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு இறைவன் உத்தரவிட்டான்.
சோதனைகள் நிறைந்த இக்காலகட்டத்தில் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல்  வெளிப்படுத்திய உறுதியான இறைநம்பிக்கையை நாமும் வளர்ப்பதற்கு முயல்வோமாக.
பொருளாதார வீழ்ச்சி, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகள் மீறுதல், தனி நபர் உரிமை நசுக்கப்படுதல் எனப் பல சோதனைகளை நமது நாடு சந்தித்து வருகின்றது. இந்த சோதனைகள் அகன்று அனைவரும் ஜனநாயக உரிமைகளை அனுபவித்து நல்லிணக்கத்துடன் வாழ இந்நாளில் இறைவனைப் பிரார்த்திப்போமாக.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை   மோடி தலைமையிலான பாஜக அரசின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *