Breaking News

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்: சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு நாள்:
சென்னையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
WhatsApp Image 2018-12-06 at 17.31.32
26 ஆண்டுகளுக்கு முன்பு 1992 டிசம்பர் 6 அன்று உ.பி. மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய பாப்ரி பள்ளிவாசல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை புறந்தள்ளி இடிக்கப்பட்டது. பாப்ரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்றைய இரவில் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “பாப்ரி பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டிக் கொடுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார்.
உச்சநீதிமன்றத்தில் பாப்ரி பள்ளிவாசல் இடிப்பிற்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான அன்றைய உ.பி. மாநில அரசின் வழக்கறிஞரும் இன்றைய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருமான கே.கே.வேணுகோபாலிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றத்திடம் அளித்த வாக்குறுதியை மீறி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது குறித்து விசாரித்த போது, கே.கே. வேணுகோபால் “நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் மீண்டும் அதனைக் கட்டுவதற்கு உத்தரவிடலாம்” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அயோத்தியில் பாப்ரி பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பாப்ரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் விரைவில் கோயிலைக் கட்ட பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாசிச அமைப்புகளைச் சேர்ந்தோர் கூக்குரலிட்டு வருகின்றனர்.
பாப்ரி பள்ளிவாசல் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே இதுபோன்ற மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசி வருகின்றனர்.
பாசிச அமைப்புகளின் இதுபோன்ற சட்டமீறல்களைக் கண்டித்தும் பாப்ரி பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பாப்ரி பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகள் என சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ள குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்-லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக டிசம்பர் 6 அன்று தமிழக மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் உட்பட 45 இடங்களில் “டிசம்பர் 6 ஃபாசிச எதிர்ப்பு தினமாக” கடைப்பிடித்து கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட தலைவர் கோரி முகம்மது தலைமை தாங்கினார். தமுமுக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம், வடசென்னை மாவட்டத் தலைவர் முகம்மது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, எஸ்.கே. சம்சுதீன், தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா.ஜெ. ஹாஜாகனி, விழியின் மாநில செயலாளர் ஹூசைன் பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் பேரா.சுப. வீரபாண்டியன், வடபழனி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி தர்வேஸ் ரஷாதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *