Breaking News

கோவையில் தமுமுக மருத்துவமனை

கோவையில் தமுமுக மருத்துவமனை

27072275_1923451207971522_1696754227740838822_n

26907217_1923451227971520_1350483738354453708_n

27073264_1923451387971504_8504989510112952244_n

கோவையில் சமுதாய போராளி கடலூர் மாவட்டம் பின்னத்தூர் மர்ஹும் எஸ்.எம். ஜின்னா பாய் அவர்களின் பெயரில் கோவை தமுமுக சார்பில் புதிய மருத்துவமனை திறப்பு விழா

69 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட மத்திய பகுதியின் ஆசாத் நகர் கிளையின் சார்பில் மருத்துவ சேவை மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தமுமுக ஆசாத் நகர் கிளையின் சார்பில் கடலூர் மாவட்டம் முஹம்மது அலி ஜின்னா நினைவு மருத்துவ சேவை மையம் தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களால் 26-௦1-2018 அன்று ஆசாத் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் இ.உமர், மமக கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது, இஸ்லாமிய பிரசார பேரவையின் மாநில செயலாளர் எ. சாதிக் அலி, மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ஜெ. கிதர் முகமது, தமுமுக தொண்டர் அணியின் மாநில செயலாளர் எம். சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜே. முஹம்மது அஸ்லம் மற்றும் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *