Breaking News

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…! தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!!

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…!
தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!!
republic-day-india
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்(பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:
இந்திய திருநாட்டின் குடியரசு தினநாள், குடிமக்களின் அரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய நாள் குடியரசு தின நாள்.
மாறுபாடுகளும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்நாட்டில் அந்த வேறுபாடுகளை களைந்து அதற்கென்று ஒரு தேசிய லட்சியத்தை வகுத்துக் கொடுத்து, அதனை சாதிக்க ஒரு நிறுவன அமைப்பை உருவாக்கியது நம் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தனிச் சிறப்பாகும்.
இந்தியா அறிவியல் வளர்ச்சியில் உலக அளவில் முன்னேறிய நாடுகளுக்கு சவால் விடுக்கிறது. அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, சம உரிமை என்ற இலக்கை அடைய நாம் தீவிரமாக களமாட இருக்கும் சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற மிக முக்கியமான ஒரு குறிக்கோளை எட்டவேண்டிய அவசரமான காலக் கட்டத்தில் இந்தியர்களான அனைவரும் இருக்கிறோம்.
மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் தங்களது பாசிசக் கோட்பாடுகளை செயல்படுத்தி வெறியுணர்வை பரப்பிடும் பிளவு சக்திகளான மத வாத சக்திகளை முறியடிக்க வேண்டிய அவசர அவசிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு.
வேற்றுமையை களைந்து ஒற்றுமை நிலை நாட்டுவோம். ஒன்றுபட்ட இந்தியாவை வலிமைப்படுத்த இந்த குடியரசு நாளில் சூளுரைப்போம்.
அன்புடன்
பி.எஸ்.ஹமீது
பொதுச் செயலாளர்(பொறுப்பு)

Check Also

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *