Breaking News

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு:
அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

25592123_946567875506778_6554639054719992293_n

25550275_946567788840120_7414062228993552303_n

25660385_2085530141680855_8245583556624295221_n

முஸ்லிம்களின் புனிதத்தலங்களில் ஒன்றாக ஜெருசலத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் திகழ்கிறது. அதேபோல் கிறிஸ்துவர்களுக்கும் அது புனித பூமியாக அமைந்துள்ளது.

1967ல் நடைபெற்ற யுத்தத்தில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதன் பின் ஜெருசலத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடிய போதிலும், அதை சர்வதேச சமூகம் இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச நாடுகள் ஜெருசலத்தை குறிப்பிட்டு வந்தன. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும் தற்போது இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ளார். அவரது நடவடிக்கை முஸ்லிம் விரோத மனப்பான்மையின் பிரதிபலிப்பாகவே அது அமைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு காரணமாக அங்கு வசிக்கும் பூர்வகுடி பாலஸ்தீனர்களை முற்றிலுமாக வெளியேற்றி அகதிகளாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க அதிபரின் எதேச்சதிகாரமான நடவடிக்கையைக் கண்டித்தும், இந்த அறிவிப்பை அமெரிக்க அரசு உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி, மமக வழக்கறிஞர் அணி செயலாளர் காஞ்சி ஜெய்னுலாபிதீன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். தமுமுக விளையாட்டு அணி பொருளாளர் முகம்மது தமீம், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஹாரூண் ரஷீத், மமக இளைஞர் அணி செயலாளர் முகம்மது அலி, மாவட்ட நிர்வாகிகள் எப்.உஸ்மான் அலி, எல்.தாஹா நவீன், முஹம்மது அனிபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *