Breaking News

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்: கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 2017 – பயங்கரவாத எதிர்ப்பு நாள்:
கருஞ்சட்டை அணிந்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

24301210_1468209179962911_8566630803907996674_n

24301059_1468203686630127_7433484962301021837_n

டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளிவாசல் இடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்படாததை கண்டித்தும், , பாபரி பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கோரியும், நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த மனிதநேய மிக்க சிந்தனையாளர்களான நரேந்திர டப்லோகர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம் மற்றும் தலித் மக்களைப் படுகொலை செய்த சமூக விரோதிகள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகளினால் அரங்கேறிவரும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று தமிழகமெங்கும் “டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினமாக” கடைப்பிடித்து கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாவட்டம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம். சார்பில் அ.சவுந்தர்ராஜன், சி.பி.ஐ. சார்பில் சி.மகேந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சுப.வீரபாண்டியன், மே17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டனஉரை நிகழ்த்தினர். மாவட்ட நிர்வாகிகள் எப்.உஸ்மான் அலி, எல்.தாஹா நவீன், முஹம்மது அனிபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *