Breaking News

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவில் ஆம்பு

நாச்சியார்கோவில் ஆம்புலென்ஸ் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கா.தமிழருவி, மக்கள் உரிமை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் இரா.சாத்தையன், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், தஞ்சை விசிறி சுவாமிகள், நாச்சியார்கோவில் பங்குதந்தை ஆனந்தராஜ், மாவட்ட அரசு மருத்துவமனை ரத்தவங்கி செவிலியர் சலீம் பாட்சா, இஸ்லாமிய விளக்க மைய செயலாளர் ரஹ்மத்துல்லா, கிரசெண்ட் பள்ளி பொருளாளர் முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்கள் தஞ்சை ஐ.எம்.பாதுஷா, வழக்கறிஞர் ஆர்.சரவணபாண்டியன் ஆகியோர் துவக்க உரையாற்றினர். அவசரஊர்தி வாங்க பெருமுயற்சி செய்த தொழிலதிபர் ஏ.சுல்தான் இப்ராஹிம் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவசர ஊர்தியை அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக தமுமுக கிளைத்தலைவர் எம்.நூருல்அமீன் அனைவரையும்  வரவேற்றார். முடிவில் ஒன்றிய தமுமுக செயலாளர் நிசார் நன்றி கூறினார். தொடர்ந்து மழைபெய்து காரணத்தால் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மக்கள் கூட்டத்தால் கீழ் தளம், முதல் தளம் அனைத்தும் நிரம்பி குடந்தை-திருவாரூர் சாலையிலும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *