டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு தினம்:
தோழமை கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேரா.எம்.எச்-.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரும் டிசம்பர் 6ஐ “பயங்கரவாத எதிர்ப்பு” தினமாக அறிவித்துள்ளது. 1992 டிசம்பர் 6 தினம்தான் பாபர் பள்ளிவாசல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் புறந்தள்ளி இடிக்கப்பட்ட பயங்கரவாத அராஜகம் நடைபெற்ற தினமாகும்.
பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, 2017 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கெடுக்க உள்ளார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை அளிப்பதற்காக இன்று தமுமுக தலைவராகிய நானும் (பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா) மற்றும் தமுமுக பொதுச் செயலாளர் பி.எஸ். ஹமீத் ஆகியோர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தோம்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். ஜி. ராமகிருஷ்ணண் அவர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்களையும் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தோம்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்