Breaking News

ராஜஸ்தானில் பால் வியாபாரி படுகொலை: கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராஜஸ்தானில் பால் வியாபாரி படுகொலை:
கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

kadayanullur

நெல்லை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு மத்திய அரசும், இராஜஸ்தான் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது யாகூப் தலைமை தாங்கினார். கடையநல்லூர் தமுமுக நகர செயலாளர் பாதுஷா, பொருளாளர் மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக பொதுச்செயலாளர் பிஎஸ்.ஹமீது, மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது, கிழக்கு மாவட்ட பொதுக்குழு தலைவர் உஸ்மான்கான், மாவட்ட பொருளாளர் ஆரிப் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், மஜீத், திவான், செய்யது அலி, சித்திக், ஷரீப், அணி நிர்வாகிகள் அஹமதுஷா, கோகோஅலி, சுலைமான், பஷீர் ஒலி, அப்துல் காதர், ஷேக், நகரச் செயலாளர்கள் பிலால், ஷேக், ஷாகுல் ஹமீது, சலீம், மசூது, இஸ்மாயில், இமாம், ஹாஷீம், உமர்கத்தாப், பீர்முஹம்மது, ஷாஜஹான், முத்தலிப், பீர்மைதீன், பாஸித், சலீம், மரக்காயர், இணையத்துல்லா, அலி, மீரான், ரபீக், ஆஷிக், மியான்ஷா, மீரான், ராஜாஜி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் ஒன்றியச் செயலாளர் சேகனா நன்றி கூறினார்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *