Breaking News

Monthly Archives: September 2016

தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கின்றேன்! தமுமுக தலைவர்

தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கின்றேன்!  தமுமுக தலைவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் மக்கள் நலப் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் ஜே.எஸ்.ரிபாயீ தலைவர், தமுமுக

Read More »

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது. அதேசமயம், இந்துத்துவாவைச் சேர்ந்த யாரேனும் தமிழகத்தில் …

Read More »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு: மமக வரவேற்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு: மமக வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் காவேரி …

Read More »

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்!

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சுவாதி படுகொலை வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ராம்குமார்  புழல் சிறையில் தற்கொலைச் செய்துக் கொண்டதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை தரக் கூடியதாக அமைந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று காவல்துறையினர் …

Read More »

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி!

முழுஅடைப்பிற்கு ஆதரவளித்த வணிகர்கள் தொழிலாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரியின் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்தும், சொத்துக்களை இழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பாக இன்று தமிழகம் …

Read More »

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது!

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் தமிழக அரசு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யாதது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிஞர் அண்ணாவின் …

Read More »

வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

வணிகர் சங்கங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழகத்திற்கு காவிரி தண்ணீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நமது நெஞ்சங்களை பிழியச் செய்துள்ளன. தனிநபர் தாக்குதல்கள் தொடங்கி வணிக நிறுவனங்கள், தமிழகப் பதிவெண் கொண்ட பேரூந்துகள், லாரிகள், கார்கள் முதலிய வாகனங்களும் …

Read More »

சென்னையில் பெருநாள் தொழுகை!

சென்னையில் பெருநாள் தொழுகை! தமுமுகவின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை சென்னையில் பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. பெருநாள் தொழுகைக்குப் பிறகு மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Read More »

தியாக சிந்தனைகளை உலகெங்கும் பறைசாற்றுவோம்… தமுமுக தலைவர் பெருநாள் வாழ்த்து!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பெருநாள் வாழ்த்துச் செய்தி: தியாகத்தின் மாண்புதனை உலகெங்கும் வாழும் மானிட சமூகத்திற்கு உணர்த்திய உன்னத நாளான ஈதுல் அல்ஹாவைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மாமனிதர்களான இறைத் தூதர்கள் நபி இப்ராஹிம்(அலை), அவரது புதல்வர் நபி இஸ்மாயில்(அலை) ஆகியோர் தன்னலம் வெறுத்து இறைவனுக்காக, இறைவனின் திரு விருப்பத்திற்காக அனைத்து தியாகத்திற்கும் தங்களை …

Read More »

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் முக்கிய நகரங்களை இணைக்க இயக்கப்படும்  ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணத்தை இன்று முதல் மாற்றி புதிய கட்டணத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டண முறையால் 50 சதவீதம் வரை கட்டணத்தை …

Read More »