Breaking News

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மமக வாழ்த்து!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மமக வாழ்த்து!
p.v.sindu
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் வெண்கலம் வெற்ற சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இறுதிப் போட்டிவரை சென்று இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைத் பெற்றுத் நாட்டிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்துக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவர் பெற்றது வெள்ளி பதக்கம் என்றாலும் தங்கத்திற்காக அவர் போராடி விளையாடிய ஆட்டம் விலைமதிப்பற்றது.
 அதேபோல் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்து ஒரே நாளில் மொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கையும் மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகின்றது.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Check Also

பி.சி. எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் சமையலர் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுலவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *