Breaking News

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு! கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு!
கர்நாடக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
mekedatu2354-600
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய பகுதிகளில் புதிய அணைகளைக் கட்டியே தீருவது என்று ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக நேற்று இந்திய சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணல் ஆகிய பகுதிகளில் புதிய அணைகளைக் கட்ட ரூ. 5,912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்நாடக அரசு தயாரித்துள்ள திட்டத்தின்படி மேகதாது அணை முதல்கட்டமாக 2,000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேகதாது அணையில் 60 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது கிருஷ்ண ராஜசாகர் அணையைவிட பெரியதாகும். இவ்வளவு பெரிய அணை குடிநீர் தேவைக்காக மட்டுமின்றி முழுக்க முழுக்க பாசனத் தேவைகளுக்காகவே கட்டப்படுகிறது என்பது அந்த திட்ட அறிக்கை மூலம் தெரியவருகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டுவருவதாக ஏற்கெனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில் சித்தராமையாவின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்பட்சத்தில் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு வெளிப்படையான சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்.
ஏற்கெனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்காமல் மௌனமாக இருக்கும் மத்திய அரசு கர்நாடக அரசின் அறிவிப்பை வேடிக்கைப் பார்க்காமல்  மேகதாது, ராசிமணல் பகுதிகளில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இத்திட்டங்களுக்கு தமிழ்நாட்டைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *