Breaking News

Monthly Archives: July 2016

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!! முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திவருவதை வேடிக்கைப் பார்த்துவரும் மத்திய பாஜகவின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமானம் நிலையம் முற்றுகை போராட்டம் (29.07.2016) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read More »

காஷ்மீர் மனித உரிமை மீறல்: நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம்‬

காஷ்மீர் மனித உரிமை மீறல்: நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம்‬ காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து நாகூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் ஏ.எம்.ஜபருல்லாஹ்‬ தலைமை தாங்கினார். வழக்கறிஞர் எம்.ஜைனுலாபுதீன்‬ அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகளும், மற்றும் நாகூர், நாகை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Read More »

குன்னூர்: டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

குன்னூர்: டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் குன்னூரில் பொது மக்களுக்கு இடையூறாக (பள்ளிவாசல் அருகில்) அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி த.மு.மு.க குன்னூர் நகரம் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார். முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read More »

காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 29.07.2016 அன்று நடைபெற்றது. இதில் தலைமைக்கழகப் பேச்சாளர் மைதீன் சேட்கான் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Read More »

கோட்டக்குப்பம்: காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்து கோட்டக்குப்பம் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30.07.2016) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Read More »

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி…

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி… திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய அரசின் சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி சிறுபான்மை மக்கள் சார்பில் இன்று (30.07.2016) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருமதி.கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read More »

முஸ்லிம்கள், தலித்கள் மீது பசுவின் பெயரால் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்! மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!!

முஸ்லிம்கள், தலித்கள் மீது பசுவின் பெயரால் கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்! மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:   நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் புலால் உண்ணாத பசுவின் பெயரில் மனிதர்களை வேட்டையாடுவது அன்றாட நிகழ்வாக மாறிவருகின்றது.   பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மண்டாசவ்ர் ரயில் நிலையத்தில் வைத்து பசு இறைச்சி …

Read More »

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

காஷ்மீரிகள் மீது ராணுவம் நடத்திவரும் அராஜக தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! காஷ்மீர் கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக பொதுமக்கள் மீது ராணுவம் அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளது. உலகில் தடை விதிக்கப்பட்ட பெல்லட் குண்டுகளை உபயோகப்படுத்தி காஷ்மீர் முஸ்லிம்கள் மீது அராஜகமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்திவருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் கண் பார்வைகளை இழந்துள்ளனர். …

Read More »

தமிழக பட்ஜெட் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டமாக அமையவில்லை… மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

தமிழக பட்ஜெட் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டமாக அமையவில்லை… மனிதநேய மக்கள் கட்சி கருத்து!! தமிழக பட்ஜெட் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2016-17க்கான திருத்த வரவு-செலவு அறிக்கை, வெற்று அறிவிப்புகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில் இன்று தாக்கல் …

Read More »

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்!

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் தொடங்கி அக்குழுவின் மூலம் அழிவின் …

Read More »