Breaking News

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

இரயில்வேயில் அவசர கால ஒதுக்கீடு படிவத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
MH Jawahirullah_MMK
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
இந்திய இரயில்வேயில் ரயில் பயணிகள் பயணிக்கும் போது அவசர கால ஒதுக்கீட்டை (எமர்ஜென்சி கோட்டா) என்ற திட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் தென்னக இரயில்வே சார்பில் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
சாமானிய மக்கள் அவசர கால ஒதுக்கீட்டின் கீழ் பயணம் செய்ய அந்தந்த ரயில்வே கோட்டத்தில் உள்ள வணிகப் பிரிவில் விண்ணப்பத்தை நிரப்பித் தரவேண்டும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அவசர கால ஒதுக்கீட்டு படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. நாடு தழுவிய விண்ணப்பப் படிவம் என்றாலும், அதில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த சாமானியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயணிக்கும் போது ஆங்கிலம் தெரிந்தவர்களை நாடவேண்டிய நிலை உள்ளது.
எனவே, அவசர கால ஒதுக்கீட்டு விண்ணப்பப் படிவத்தில் தமிழகத்தில் ஆங்கிலத்துடன், தமிழ் மொழியை சேர்க்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *