Breaking News

பெங்களூரு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

பெங்களூரு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தலைவர் தமுமுக
தலைவர்
தமுமுக
தமுமுக தலைவர் வலியுறுத்தல்!!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் வேகமாக கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இதில் சஃபானா தாஜ் (35) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் முகமது அஹாத் இஸ்மாயிலை தாக்கி, அவரது காரையும் தீயிட்டுக் கொளுத்தியதுடன் அந்த வழியாகச் சென்ற அனைத்து ஆப்பிரிக்க மாணவர்கள் மீதும் அக்கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்போது அங்கு வந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியைத் தாக்கிய கும்பல், அவரை அரை நிர்வாண கோலத்தில் ஊரைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர். அம்மாணவிக்கு உதவ முயன்ற இளைஞரும் தாக்கப்பட்டுள்ளார். இதனை அங்கிருந்த போலீஸார் வேடிக்கைப் பார்த்துள்ளனர்.
ஒரு வழியாக கும்பலிடம் இருந்து தப்பிய அம்மாணவி, ஹெசரகட்டா காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் கல்லூரி மாணவியின் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து ஆப்பிரிக்க மாணவர்கள் தான்சானியா வெளியுறவு தூதரகத்தில் உதவிகோரிய பின் கர்நாடக டிஜிபி ஓம் பிரகாஸ் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு ஹெசரகட்டா போலீஸாருக்கு உத்தரவிட்ட பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஆப்பிரிக்கர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் ஈடுபட்ட நிலையில் வெறும் 5 பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் கள் மீது இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கைப் பார்த்த காவலர்களும், புகாரைப் பதிவு செய்ய மறுத்த காவலர்களும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசை தமுமுக வலியுறுத்துகிறது.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *