Breaking News

வெகு சிறப்பாக நடந்தேறியஅபுதாபி மண்டல தமுமுகவின் இப்தார் நிகழ்ச்சி

இறைவனின் அருட்பெரும் கிருபையால் அபுதாபி இஸ்லாமிக் சென்டரில் 05/07/2014 சனி மாலை 5 மணியளவில் அபுதாபி மண்டல தமுமுகாவின் இப்தார் நிகழ்ச்சி மண்டல துணைத்தலைவர் அபுல்ஹசன் தலைமையில் அமீரக தலைவர் அப்துல் ஹாதி மற்றும் அபுதாபி மண்டல செயலாளர் சபியுல்லா முன்னிலையில் துவங்கியது. திருச்சி அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். துணைச் செயலாளர் அடியற்கை ஷேக்தாவுது வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் சகோதரர் கோவை முஜிபுர் ரஹ்மான் ரமளானின் சிறப்புகள்

என்ற தலைப்பிலும், சகோதரர் தைமியா சஹாபாக்கள் வாழ்வுதரும் படிப்பினை

 

என்ற தலைப்பிலும், சகோதரர் ஹாரூன் ரசீது இந்தியாவில் இஸ்லாமியர்கள் நிலை

என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். சகோதரர் சர்தார் நன்றி கூற இப்தாருடன் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

 

பிரம்மாண்ட ஏற்பாட்டை அபுதாபி மண்டல தமுமுக சொந்தங்கள் ஏற்பாடு செய்திருந்தனர். புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

 

Check Also

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.   s.k. சம்சுதீன் ஹஜிரத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *