Breaking News

அல் அய்னில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

அமீரகத்தின் (யு.ஏ.இ) அல் அய்ன் நகாில் இயங்கி வரும் இந்தியன் சோஷியல் சென்டர் (ISC) தமிழ் பிாிவு சார்பாக ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி 10-07-2014 வியாழக்கிழமை இரவு தராவீஹ் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.

 

மாணவர் அப்துல் அஹத் இறைமறை வசனங்கள் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இந்தியன் சோஷியல் சென்டர் துணைத் தலைவர் சகோதரர் கீழை முஸ்தஃபா முபாரக் உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் தமுமுக தலைமைக் கழக பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான சகோதரர் கோவை முஜிபுர் ரஹ்மான் ”இறையச்சம்” என்ற தலைப்பிலும் தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோதரர் என்.ஏ.தைமிய்யா ”சகோதரத்துவம்” என்ற தலைப்பிலும் மனிதநேய மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது ”தமுமுகவின் பணிகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

 

அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாசின் நூருல்லாஹ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

வந்திருந்த அணைவருக்கும் அல் அய்ன் மண்டல தமுமுக சார்பில் சஹருக்கான உணவு வழங்கப்பட்டது.

 

அல் அய்னில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழக இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது குடும்பத்தாருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

 

இந்தியன் சோஷியல் சென்டர் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த அமைப்பின் சார்பில் தமிழில் பயான் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நமது தலைமை நிர்வாகிகள் ஹாரூன் ரசீது,தைமிய்யா,கோவை முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்தியன் சோஷியல் சென்டர் சார்பில் நினைவு பாிசு வழங்கப்பட்டது.

Check Also

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.

தமுமுக குவைத் மண்டலத்தின் முதல் கட்ட தர்பியா இன்று அஹமதி கிளை நிவார்கிகளுக்கு நடந்தது.   s.k. சம்சுதீன் ஹஜிரத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *