Breaking News

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை சார்பாக மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொண்டி சேகு தாவூது தெருவில் உள்ள சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 20,000 இருபது ஆயிரமும், தொண்டி கிழக்கு பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4,000 மும், தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1,000 மும், ஆக மொத்தம் ரூபாய் 25,000 இருபத்திஐந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் கலந்தர் ஆசிக் , தமுமுக ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் , நகர் கிளை தலைவர் முஹம்மது சாதிக், நகர் செயலாளர் சம்சுதீன் நவ்வர், மமக செயலாளர் ஆயிஷா பரக்கத் , நகர் பொருளாளர் நெய்னார் ஹாஜா , மற்றும் வார்டு நிர்வாகிகள் சம்சு நெய்னா, டால்பின் அப்துல் ரகுமான், அப்துல் ரசாக் ,சேகு அபூபக்கர் , அன்சாரி , ஜகுபர் ,மீரான் ,சே.பீ , ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார் .

Check Also

விருதுநகர் இரத்த தான முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *