இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தமிழக மக்களின் ஒருமித்த உணர்வு என்ற அடிப்படையில் நடுவண் அரசு, இத்தீர்மானத்தை அங்கீகரிக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், அம்மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் கலந்துக்கொள்ள காங்கிரஸ் உயர்மட்டக்குழு பிரதமருக்கு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் தமிழக மக்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
இதனைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் எதிர்வரும் நவம்பர் 6 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் நடுவண் அரசு, தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மதித்து நடக்கக்கோரி, தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்திட வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
(எம். தமிமுன் அன்சாரி)