Breaking News

மதுவும்-மருத்துவமனையும்

இரண்டு நாள்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலியில் உள்ள நமது தமுமுக சகோதரர் மன்சூர் என்னை தொடர்புக் கொண்டு தங்கள் ஊரை சார்ந்த மாற்று மத நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் துபாய் அல் பரஹா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் இங்கு அவரை கவனித்து பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று தகவல் கொடுத்தார்,அதன் அடிப்படையில் நானும் துபாய் மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத்,சென்னை முஹம்மத் பிலால் ஆகியோர் மருத்துவ மனையில் உள்ள அந்த நபரை சந்தித்து பேசினோம்.

மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய உதவியாளர்களை அனுகி ஏதனால் இந்த நபருக்கு பாதிப்பு என்று கேட்ட போது அதிகமாக மது அருந்தியதால் அவரின் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் நாங்கள் வருவதற்கு முன்பு தான் அவர் பணியாற்ற கூடிய நிறுவனத்தின் பொறியாளர் சந்தித்து பேசியதாக கூறினார்,பொறியாளரின் அலை பேசி எண்ணை பெற்று தொடர்பு கொண்டு பேசினோம், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் PRO மருத்துவரை சந்தித்து பேசுவார் என்றும் மருத்துவர் அனுமதி கொடுத்தால் சிகிச்சை பெற்று வரும் நபரை தாய் நாட்டிற்கு அனுப்ப நிறுவனம் தயாராக உள்ளதாகவும் கூறினார்,

பிறகு சகோதரர் பரமக்குடி இப்ராஹிம் அவர்களை தொடர்புக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நபரின் நிறுவனத்தில் பேசும்மாறு கேட்டுக் கோண்டோம் அவரும் பேசி அதே பதிலை கூறினார்,

அமீரக தமுமுக நிர்வாகிகள் தலைவர் அப்துல் ஹாதி,ஹுசைன் பாஷா ஆகியோர்களின் ஆலோசனைகளையும் பெற்றோம், துபாய் தமுமுகவின் சார்பாகவும் சிகிச்சைப் பெற்றுவரும் நபரை தாயகம் அனுப்ப முயற்சிகள் நடைப் பெற்று வருகிறது .சிகிச்சை பெற்று வரும் நபரின் குடும்பத்தார்களும் நம்மிடம் பேசினார்கள்,இதனிடையே ஒரு சில சகோதர்கள் குடி காரனுக்கு ஏன் உதவ வேண்டும் என்று நம்மிடம் கேட்டார்கள் அதற்கு மனித நேயத்தின் அடிப்படையில் உதவலாம் என்று பதில் கூறினோம்.

அருமை நண்பர்களே தாயகத்தில் இருந்து தனது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் அயல் நாடுகளுக்கு பணியாற்ற செல்கிறார்கள் ஆனால் அவர்கள் சேரக்கூடிய நண்பர்கள் சரியில்லாத காரணத்தாலும் மற்ற காரணங்களாலும் மது போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி தனது வாழ்நாளை இழக்கக்கூடிய சூழ்நிலைகளை பார்க்கிறோம், அவர்களின் குடும்பத்தார்களை பற்றி சிந்திக்காமல் அழிவை நோக்கி செல்லக் கூடிய நபர்களாக அவர்கள் இருப்பதை பார்க்கிறோம்,

மகன் வருவான் என்ற எதிர்பார்ப்பில் முதுமை வயதை அடைந்த பெற்றோர்களும், கணவன் கை நிறைய சம்பாதித்து வருவார் குடும்ப கஷ்ட்டம் நீங்கும் என்ற சிந்தனையில் மனைவியும்,அண்ணன் வருவார் தனுக்கு திருமணம் நடத்தி வைப்பார் என்ற எதிர்பார்ப்போடு சகோதரிகளும்,தனது தந்தை வருவார் வரும் போது தனுக்கு பொம்மைகளை வாங்கி வருவார் என்ற எதிர் பார்ப்பில் பாசத்தோடு கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை தீய பழக்கத்திற்கு ஆளாக கூடிய நண்பர்களே சற்று சிந்தியுங்கள். இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள் நேர்வழி பெறுவீர்கள்.

மது அருந்தாதீர் வெளிநாட்டிலும் மட்டும் அல்ல உள் நாட்டிலும் உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல் குர்ஆன்– 5 : 91

அன்புடன்,

முஹைதீன்

தமுமுக

துபாய்

0503762170

Check Also

ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்!

உலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *