குவைத்தில் கண்ணிவெடியில் சிக்கி கால்களையும், பார்வையையும் இழந்த ஜெய்சங்கர் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் குவைத் தமுமுகவினர் அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவரது நிலைமை குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தந்தனர். மேலும் அவருக்கு உதவிகரமாக இருந்து அவருக்கு மன ஆறுதல் கூறி அவரை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் ஜெய்சங்கரின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, விரிவான மனு எழுதி, அவரை தாயகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு இழப்பீடு அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, ஜெய்சங்கர், விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை விழுப்புரம் மாவட்ட மமக செயலாளர் மமக செயலாளர் முஹம்மது அலி அவர்களும், காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் தலைமையில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வரவேற்றனர்.
இதையடுத்து குடும்பத்தினருடன் தமுமுக தலைமையகத்திற்கு வருகைதந்த ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது அவர்களை சந்தித்து, தனக்கு உதவிய குவைத் தமுமுக, விழுப்புரம் மாவட்ட தமுமுக மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மனமார நன்றி கூறினார். அப்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட மமக செயலாளர் ஏ.ஜே. முஹம்மது அலி உடனிருந்தார்.