Breaking News

Daily Archives: August 31, 2012

படகு விபத்தில் உயிரிழந்த மீனவர் சி. பால்ராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஜவாஹிருல்லாஹ் MLA ஆறுதல் கூறினார்

இராமநாதபுரம் தொகுதி இரட்டையூரணியைச் சேர்ந்த மீனவர் சி. பால்ராஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 26 அன்று மேங்களுரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிர் இழந்தார். அவரது இல்லத்திற்கு இன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேரில் சென்று அவரது மனைவி கோகிலவேணி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இரட்டையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி உடன் இருந்தார்.

Read More »

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் – மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை

புனித மக்கா நகரம் 150 கோடி முஸ்லிம்களால் புனிதமாகக் கருதப்படும் நகரம். இங்கு இந்தப் பூமிப்பந்தின் முக்கிய முஸ்லிம் அரசுகளின் தலைவர்கள் இரு புனிதத்தலங்களின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் அழைப்பினை ஏற்று ‘மக்கா உச்சி மாநாட்டு’க்கு வருகை தந்தனர்.

Read More »

கல்வித்துறையில் அதிகரிக்கும் குற்றங்கள்

சென்னையில், ஜூலை 19 அன்று, கணேஷ்குமார் (13) என்ற 8வது வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சகட்டுமேனிக்கு அடித்துக் கொன்று விட்டனர். பள்ளி வளாகத்துக்குள்ளேயே இச்சம்பவம் நடந்திருக்கிறது. உடற்பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கிடையே நடந்த சண்டை, கொலையில் முடிந்திருக்கிறது. உடற் பயிற்சிக்கான வகுப்பாசிரியர் பரமேஸ்வரன் அந்த வகுப்பிற்கு வராமல் போய்விட்டார். இப்போது, பரமேஸ்வரனும், கொலைக்குக் காரணமான மாணவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Read More »

இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் ஊடக வன்முறை – தினமணிக்கு தமுமுக பதிலடி

பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மிகவும் கொடுமைக்குள்ளாகி வருவதாக இங்கு பல ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் சிறுபான்மையினருக்குப் பரிதாபப்படும் போர்வையில் இந்திய முஸ்லிம்கள் மீது விஷத்தைக் கக்கி வெறுப்பை விதைக்கும் வேலையை சில பத்திரிகை பாசிசவாதிகள் செய்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு தினத்தந்தி நாளேடு இத்தகைய விஷமக் கருத்தைத் தலையங்கமாக தீட்டியது. உச்சக்கட்ட வெறியை உமிழ்ந்திருந்த அந்தத் தலையங்கத்திற்கு தமுமுக …

Read More »