மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை:
மத்திய அரசு மீண்டும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற நாசகார திட்டத்தை அனுமதிக்கும் முடிவில் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் வெகுஜன விரோதமானவை; வன்மையான கண்டனத்துக்குரியவை.
இந்தியத் திருநாட்டில் வாழும் கோடிக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை மக்களை வறுமை எனும் இருளில் நிரந்தரமாகத் தள்ளிவிட மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு, மீண்டும் அந்நிய காலணி ஆதிக்கத்திற்கு வழிவகை செய்யும் செயலாகவே அமையும். எனவே மத்திய அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும், அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டுப் பெருநிறுவனங்களும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கொள்முதல் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருக்குமானால் மனிதநேய மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் முன்பாக போராட்டங்களை நடத்த நேரிடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ
மமக தலைவர்