கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளுக்கும் ஈகைத்திருநாள் சிறப்பு மதிய உணவினை கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் சகோதரர் ஷேக் தாவுத் தலைமையில் தமுமுக வினர் சிறைத்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சிறைத்துறை அதிகாரிகளின் முறையாக அனுமதிப் பெற்று சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் ஈகைத்திருநாளில் சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளுக்கும் சிக்கன் பிரியானி, வெஜிடேபிள் பிரியானி, சலாட், பீரியா இனிப்பு கஞ்சி என 1100 நபர்கள் உனவருந்தும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டது. பெருநாள் தொழுகை முடிந்தவுடன் மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத் அவர்கள் தலைமையில் தமுமுக-மமக நிர்வாகிகள் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுமதி பெற்று சென்று சந்தித்த சில சிறைவாசிகளுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, உணவு வழங்குவதை துவங்கி வைத்தனர்.
அப்பொழுது தமுமுக மாவட்ட செயலாளர் அவர்கள் கூறுகையில் உங்கள் அனைவர் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, எங்கள் வழி காட்டி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மனித நேயத்தின் அடிப்படையில் இந்த உணவு வழங்கப்படுகின்றது. இஸ்லாம் மனித நேயத்தை வலியுறுத்துகின்றது. மேலும் தமுமுக சார்பாக இன்ஷா அல்லாஹ் எல்லா வருடங்களும் இங்கு உணவுகள் வழங்கப்படும் எனவும் சிறந்தமுறையில் ஒத்துழைப்பு வழங்கிய சிறைத்துறை காவல்துறை அதிகாரிகளுக்கும் உளம் கனிந்த நன்றி என தனது சிற்றுறையில் குறிப்பிட்டார். நெல்லிக்குப்பம் நகர தமுமுக-மமக ரியாத், தமாம் வாழ் நெல்லிக்குப்பம் தமுமுக சகோதரர்கள் உடன் இருந்தனர்,
மேலும் கடலூர் மாவட்ட தமுமுக சார்பாக கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு சஹர் மற்றும் இஃப்தார் உணவுகள் 30 நோன்புக்கும் வழங்கப்பட்டதும், இஸ்லாமிய சிறைவாசிகள் ஈத் பெருநாளை இனிதே கொண்டாடும் வகையில் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.