Breaking News

Daily Archives: August 24, 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை: மத்திய அரசு மீண்டும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற நாசகார திட்டத்தை அனுமதிக்கும் முடிவில் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் வெகுஜன விரோதமானவை; வன்மையான கண்டனத்துக்குரியவை. இந்தியத் திருநாட்டில் வாழும் கோடிக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை மக்களை வறுமை எனும் இருளில் நிரந்தரமாகத் தள்ளிவிட மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.

Read More »

கடலூர் மாவட்ட தமுமுக-மமக சார்பாக கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளுக்கும் ஈகைத்திருநாள் சிறப்பு உணவு

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளுக்கும் ஈகைத்திருநாள் சிறப்பு மதிய உணவினை கடலூர் மாவட்ட தமுமுக செயலாளர் சகோதரர் ஷேக் தாவுத் தலைமையில் தமுமுக வினர் சிறைத்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சிறைத்துறை அதிகாரிகளின் முறையாக அனுமதிப் பெற்று சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் ஈகைத்திருநாளில் சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளுக்கும் சிக்கன் பிரியானி, வெஜிடேபிள் பிரியானி, சலாட், பீரியா இனிப்பு …

Read More »

கொடிக்கால்பாளையம் தமுமுக சார்பாக முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிக்காக வசூல்

கடந்த 20.8.2012 பெருநாள் அன்று கொடிக்கால்பாளையம் மற்றும் திருவாரூர் பள்ளிவாசல் வாயிலில் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிக்காக வசூல் செய்யபட்டது.

Read More »

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் பெருநாள் தொழுகை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் வசித்து வருகின்றனர். ரமலான் பண்டிகையின் சிறப்பு தொழுகை எருமைப்பட்டியில் முட்டாச்செட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் முத்தவல்லியின் தலைமையில் ஹஜ்ரத் ஹாபிழ் K. பர்ஹானுதின் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்பு உரையாற்றினார்.

Read More »

தமுமுக பண்டாரவாடை (கிளை) உதவிகள்

கடந்த 10.08.2012 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பண்டாரவாடை (கிளை) சார்பாக 3 பயனாளிகளுக்கு தையல் மிசின், 1 நபருக்கு மருத்துவ உதவி ஆக ரூ. 20,000 மதிப்பிற்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் M. முஹம்மது சலீம், கிளை தலைவர் பீர் முஹம்மது, கிளை செயலாளர் அஸ்ரப் அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Read More »

கோவையில் தமுமுக-மமக அவசர நிர்வாக கூட்டம்: தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்த அவசர நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் E. அஹமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கூவி மாநகர் மாவட்ட தமுமுக செயலாளர் A. சாதிக் அலி, கோவை மாநகர் மாவட்ட மமக செயலாளர் A. அப்துல் பஷீர் மாவட்ட பொருளாளர் N. அஜ்மீன் கான், கோவை மாநகர் மாவட்ட …

Read More »

முதியோர் காப்பகத்தில் இருந்தவர் திடீர் மரணம். மருத்துவ அணி சேவை சார்பாக இஸ்லாமிய முறைப்படி உடல் அடக்கம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ அணி சேவை சார்பாக புளியகுலம் சாய்பாபா முதியோர் காப்பகத்தில் இருந்த முஹம்மது வயது 70 இவர் கடந்த 12.08.2012 அன்று காந்திபுரம் நடைபாதை மேம்பாலம் அருகில் மயங்கிய நிலையில் இருந்த இவரை ஈர நெஞ்சம் அமைப்பினரும் B-3 காவல் நிலைய துணை ஆய்வாளர் விஜயேந்திரன் அவர்களும் சேர்ந்து முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர்.

Read More »