Breaking News

Daily Archives: August 23, 2012

மனநிலை மாற வேண்டும்!

ஜனநாயகம் என்பதற்கு, ‘மக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளைக் கேள்வி கேட்கும் உரிமையும் உண்டு’ என்றும் பொருள் கூறலாம். ஆனால் நமது ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும் இந்தப் பொருளுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர். என்னைக் கேள்வி கேட்பதா? என்னை விமர்சிப்பதா? என்னைப் பற்றி எழுதுவதா? என்று கொதித்து விடுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் பெண் அரசியல்வாதிகளிடம் இந்த மனப்போக்கு அதிகமாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி கேள்விகளை எதிர்கொள்ள …

Read More »

தமுமுக நெல்லை மேற்கு மருத்துவ சேவை அணிக்கு இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பாக விருது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணியின் இரத்த தான சேவையையும், மருத்துவ சேவையையும் பாராட்டி இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.

Read More »

சவூதி அரேபியா யான்பு மாநகரில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

இறைவனுடைய மாபெரும் கிருபையினால் கடந்த 20-08-2012 திங்களன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி யான்பு கிளையின் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சவூதி அரேபியா ஜித்தா மேற்குமண்டலத் தலைவர் சகோ. புதுமடம் இபுராஹீம் அவர்களும், செயலாளர் காரைக்கால் அப்துல் மஜீத் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Read More »

கோவை – நகரபுனரமைப்பு திட்டத்தின் கீழ் தார்ச் வீடு கட்ட அனுமதி

கோவை மாநகராட்சி ஜவகர்லால் நேரு நகரபுனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை மாற்றி தார்ச் வீடுகளாக கட்டுவதற்கு 86 வது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை கட்டி கொள்வதற்கு அனுமதியும் தொகைக்கு தேவையான ஆர்டர் காப்பியும் ( 1,44,450.00 ரூபாய் ) தெற்கு மண்டல 86 வது வார்டு துணை பொறியாளர் பத்மாவதி அவர்கள் முன்னிலையில் 17 பயனாளிகளுக்கு முன்றாம் கட்டமாக கோவை மாநகராட்சி 86 வது வார்டு மனித …

Read More »

மேலப்பாளையத்தில் த.மு.மு.க.சார்பில் பெருநாள் கொண்டாட்டம்

பெருநாள் அன்று மேலப்பாளையம் 29 வது வார்டு தமுமுக.சார்பில் பெருநால் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்டம், வாள்வீச்சு, சுருள்வாள்வீச்சு, தீப்பந்தம் சுற்றுதல் என ஏராளமான வீர விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை ம.ம.க.மாவட்ட செயலாளர் கே.ஸ்.ரசூல் மைதீன் துவக்கி வைத்தார். ஏற்பாடு 29 வது வார்டு நிர்வாகிகள் செய்தனர். இதில் ஏராளமான சமுதாய மக்கள் கலந்துகொண்டனர்.

Read More »