Breaking News

Daily Archives: August 18, 2012

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை – திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மியான்மரில் (பர்மா) 20,000 முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததை கண்டித்தும்… அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளால் 75 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இவ்விசயத்தில் மௌனம் காத்து வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் திருச்சியில் த.மு.மு.க திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ம.ம.க மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்களின் கண்டன உரையில் நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மாவட்ட செயலாளர் …

Read More »

மின்சார ரயிலில் அடிபடும் விபத்து 20 வருடங்களாக பிணங்களை அள்ளும் அன்சாரி

சென்னை மின்சார ரயில்களில் உச்சநேரங்களில் மக்கள் கூட்டம் திமிறி நிற்கும். இதனால் இளைஞர்கள் ரயிலின் வாசற்படியில் நின்றுகொண்டு பயணம் செய்வார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தான பயணம் என்று அவர்கள் உணர்வதில்லை. ரயிலுக்கு மின்கம்பிகள் இணைப்பு தரும் இரும்புத் தூண்கள் இருபக்கமும் வரிசைகட்டி நிற்கின்றன. ரயிலுக்கும் சில தூண்களுக்குமான இடைவெளி மிகக்குறைவாக உள்ளன என்பதால் அத்தூண்களில் அடிபட்டு இறப்பவர்கள் அதிகம்.

Read More »

நாடாளுமன்றத் தேர்தல் 2014 – அத்வானி அலறலின் பின்னணி என்ன?

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, அக்கட்சியின் எதிர்கால நலனுக்கு எதிராக ஓர் உண்மையை அறைந்து சொல்லியிருக்கிறார். அது எதிர்வரும் 2014ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் சார்பில் யாரும் பிரதமராக முடியாது. காங்கிரசிலிருந்தும் பிரதமராக யாராலும் வரமுடியாது. பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒருவர் இவ்விரு கட்சிகளின் ஆதரவில் பிரதமராக வாய்ப்புள்ளது என அத்வானி கூறியிருக்கிறார்.

Read More »

பீதிகளை பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சி இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் வெளியிடும் அறிக்கை: அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் அலைபேசி மூலம் குறுந்தகவல்கள் தென்னிந்தியா முழுவதும் பரவி நாட்டில் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருவதாக வெளியான செய்திகள் வெகுஜன மக்கள் நலன் நாடுபவர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. வந்தாரை வாழவைக்கும் அமைதிப் பூங்காவாம் தமிழகத்திலும் உழைக்க வந்திருக்கும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு …

Read More »

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் இனப்படுகொலை – ஹோசூர் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மியான்மரில் (பர்மா) 20,000 முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததை கண்டித்தும், அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளால் 75 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இவ்விசயத்தில் மௌனம் காத்து வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ஹோசூர் தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மமக மாநில தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்களின் கண்டன உரையில், தமுமுக நகர தலைவர் இஜாஸ் கான் தலைமை தாங்கினார்கள். தமுமுக மாவட்ட தலைவர் …

Read More »

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை – ஆம்பூர் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மாவில்), முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் ஆம்பூர் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆம்பூர் நகரில் 17-08-12 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடித்த உடன், அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் (பர்மாவில்), முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் படுகொலையை கண்டித்து தாலுக்கா அலுவலகம் முன்பு பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிர்கள் நோன்பு வைத்த நிலையிலும், கடும் வெயிலை பொருட்படுத்தாமலும் …

Read More »