Breaking News

Daily Archives: August 16, 2012

ரம்ஜான் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கவும், சிறப்பு அரசு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசுக்கு தமுமுக தலைவர் கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வரும் 20.08.2012 திங்கட்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக ரம்ஜான் மற்றும் ஹஜ் பண்டிகை நாட்களில் முஸ்லிம்கள் அனைவரும் காலையில் பள்ளிவாசல்களில் கூடி தொழுகை நிறைவேற்றுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த ஆண்டு, பெருநாள் தினத்தன்று மின்தடை காரணமாக முஸ்லிம்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, இவ்வருடம் இதுபோன்ற மின்தடை ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் …

Read More »

ஜவாஹிருல்லாஹ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் விருது! – ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

செய்தி: காயல்பட்டணம்.காம் தமிழகத்தில் உள்ள முன்னணி ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தெற்கு மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை (சி.பி.எம்.), பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜே. புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.) மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியராஜன் (தே.மு.தி.க.) ஆகியோர் …

Read More »

வெடிகுண்டு தயாரிக்கும் போது சிக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி

கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு அருகே கோயிலாண்டி பகுதியில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது வீட்டிலிருந்து ‘டமால் என்று சப்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வீடு பலத்த சேதம் அடைந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பிரமுகர் ஜோஷிராம் என்பவரின் வீட்டில் வெடி குண்டுகள் தயாரிக்கும் போது அவை திடீரென்று வெடித்ததாகவும் அதனால் அவரது வீடு சேதம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

பெருநாள் தர்மம்

முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புஹாரி (1504) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகை யையே துவக்குவார்கள். தொழுது …

Read More »

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தமுமுக மாணவரணி சார்பில் இப்தார் நிகழ்ச்சி

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தமுமுக மாணவரணி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மமக இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, தமுமுக மாநில செயலாளர் பேரா. ஜே. ஹாஜா கனி, கல்லூரி முதல்வர் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப், உட்பட ஏராளமானோர் தமுமுக மாணவரணியினர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், …

Read More »

கோவையில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

புதன்கிழமை (15 -8 -2012 ) கோவை காளவாய் ஆய்ஷா மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மூத்த தலைவர் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்கள் சிறப்புரையுடன் மாபெரும் இப்தார் விருந்து நடைபெற்றது.

Read More »