Breaking News

Daily Archives: August 13, 2012

நேர்மை அரசியல்வாதி விருது பெற்றார் டாக்டர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ

நம் நாட்டில் மிகவும் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மிக்கதாக இருப்பது நேர்மை. இன்னவர் நேர்மையானவர் என்று யாருக்கும் சான்றளிக்க இயலவில்லை. யாரையும் நேர்மையாளர் என்று யாரும் நம்பத் தயாரில்லை என்பதாக சூழ்நிலை இருக்கிறது. இந்த நேர்மைப் பஞ்சத்தைப் போக்குவதற்காக வேண்டி சமூகதளத்தில் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைப்புகளாகவும் உருவாகி இருக்கிறார்கள். ஆன்மீக, சித்தாந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட காரணத்தால் மக்கள் பேராசைப் பிடித்து லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் துணிந்துவிட்டனர். …

Read More »

தமுமுகவின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜின்னா மரணம்

தமுமுகவின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் தலைவராகவும், பின்பு மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றிய S.M. ஜின்னா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்கள். (இன்னாலில்லாஹி…). அவருக்கு வயது 64. அவருக்கு ஒரு மனைவியும் 4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்தாலும், தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபாடு காட்டி வந்தார். கடந்த ஜூலை 14 அன்று …

Read More »

சென்னை மேயரின் அறியாமை

சென்னையின் வடபகுதிகளில் காலரா நோய் பரவுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு குடிநீரில் கழிவுநீர் கலப்பதே காரணமாக இருக்க முடியும். வடசென்னையில் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு தற்போது வழங்கிவரும் குடிநீர் பயன்படுத்த தகுதியானதாக இல்லை. துர்நாற்றத்துடன் அசுத்தங்கள் கலந்தவையாக இருக்கின்றன. நீர்வரும் குழாய்களின் பாதைகளில் உடைப்பு இருந்தால் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை இன்னும் சீராகவில்லை. காலரா பரவுவதாக சொல்வதெல்லாம் வதந்தி என்று கூறுகிறார் சென்னை மேயர். ஒரே …

Read More »

மாருதி தந்த பீதி

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியில் ஏற்பட்ட மோதல் மனிதவள மேலாளர் அவனிஷ்குமார் என்பவரை உயிரோடு கொளுத்தி, நிறுவனத்தை தொழிலாளர்கள் அடித்து நாசப்படுத்தியதில் முடிந்துள்ளது. புதுடெல்லி மாருதி தொழிற்சாலையில் நடந்துள்ள இக்கலவரத்தில் 90 ஊழியர்கள் படுகாயமுற்றனர். அலுவலக ஊழியர்களான இவர்களை அடித்தட்டுத் தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகளாலும், கார் உதிரி பாகங்களாலும் தாக்கியதாகத் தெரியவருகிறது.

Read More »

தஞ்சாவூரில் திருக்குர்ஆன் மாநாடு

ஹாஜி சிராஜீதீன் முஹம்மதா டிரஸ்ட் சார்பாக தஞ்சாவூரில் கடந்த 05-08-2012 ஞாயிறு மாலை 3மணிக்கு திருக்குர்ஆன் மாநாடும், அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read More »

கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க நடத்திய இப்தார் நிகழ்ச்சி

கோட்டகுப்பம் ஜமியத் நகர் சமுதாய நல கூடத்தில் த.மு.மு.க சார்பாக இப்தார் நிகழ்ச்சி 11.8.2012 (சனிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை கோட்டக்குப்பம் த.மு.மு.க நகரம் ஏற்பாடு செய்திருந்தது. மௌலான முஹம்மது ஆசிக் அலி அவர்கள் கிராயத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் சமது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் S.S.நாசர் உமரி அவர்கள் …

Read More »

தமுமுக மாணவரணி திருச்சி மாவட்டம் சார்பாக இப்தார் நிகழ்ச்சி

தமுமுக மாணவரணி திருச்சி மாவட்டம் சார்பாக இப்தார் நிகழ்ச்சி 11.08.12 அன்று மாலை 5.00மணியளவில் திருச்சி சிங்காரதோப்பு ஜெம் பிளாச திருமண மண்டபத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் நஷீர் தலைமையில் நடை பெற்றது.

Read More »

திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி

தமுமுக மாணவரணி திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி 29.07.12 அன்று இக்ரா மினி ஹாலில் கிளை மாணவரணி செயலாளர் மன்சூர் பாபர் தலைமையில் நடைபெற்றது.

Read More »