Breaking News

இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தலைமைச் செயலாளரிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தல்

இராமநாதபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள சிடி ஸ்கேனை செயல்படுத்துதல் மற்றும் அடிப்படை வசதிகளைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

எனது தொகுதியான இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அடிக்கடி சி.டி.ஸ்கேன் செயலிழந்து நிலையில் உள்ளது. இதன்காரணமாக நோயாளிகள் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என எனக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றது. இதன்காரணமாக பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் மோசம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. சி.டி.ஸ்கேன் செயலிழந்து இருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு பலர் ஆபத்தான நிலையில் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது, அவர்களில் பலருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால் செயல்படாத சி.டி. ஸ்கேனால் மீனவர்கள் பாதிக்கப்படும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே தாங்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, பழுதாகி செயலிழந்து இருக்கும் சி.டி. ஸ்கேனை விரைந்து பழுதுநீக்கி அல்லது மாற்றம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் இராமநாதபுரம் ஆட்சியருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பட்டுள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

எனது தொகுதியில் உள்ள இராமநாதபுரம், இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை அரசு பொதுமருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

Check Also

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *