Breaking News

சிரியாவில் அமைதி திரும்ப வேண்டும்

அரபு நாடுகளில் துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் சிரியா, லிபியா, ஏமன் நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் ஆதரவுடன் லிபியா கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிப்போலியைக் கைப்பற்றி அதிபராக இருந்த கடாபியைக் கொன்றனர். அதேபோல் சிரியாவில் அதிபராக இருக்கும் பசருல் அசாத்தை பதவி விலகக்கோரி மக்களில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவத்துக்கு எதிராக ‘எரிமலை’ என்ற பெயரில் போராட்டம் செய்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 13,296 பொதுமக்களும், 4,861 ராணுவ வீரர்களும், 949 போராட்டக்காரர்களும் பலியாகியுள்ளனர். காணாமல் போனவர்கள், சிறையிடப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை என்கிறார் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான்.

இதனிடையே கடந்த வாரம் நடந்த தாக்குதல் ஒன்றில் ராணுவ அமைச்சர் தாவூது ராஜா கொல்லப்பட்டிருக்கிறார். இவர் அதிபர் அசாதின் உறவினர் ஆவார்.

இதனிடையே, கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபையில், சிரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை சீனாவும் ரஷ்யாவும் எதிர்த்தன.

சிரியாவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி கொடுத்து அதிபர் அசாத்தை விரட்ட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. 2005ல் லெபனான் பிரதமர் ரஃபிக்குல் ஹரீரி கொல்லப்பட்டபோது, சிரியாவை அதற்குப் பொறுப்பாக்கி, அதுமுதல் பல்வேறு நெருக்குதல்களை மேற்குலகம் சிரியாவின் மீது திணிக்கிறது.

லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும், பாலஸ்தீனில் இருக்கும் ஹமாசுக்கும் ஈரானுடன் சேர்ந்து சிரியாவும் ஆதரவும் உதவிகளும் செய்து வருகிறது. அதுவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் கோபத்துக்கு காரணம். இஸ்ரேலை எதிர்க்கும் சிரியாவை, அசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம்.

அதேநேரம், சிரியாவின் அதிபர் அசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சன்னி பிரிவு முஸ்லிம் நாடுகள் சமரசத்தை சாதுர்யமாக தவிர்ப்பதாகத் தெரிகிறது. எண்ணெளிணி வர்த்தக நாடுகள் கழகம் மற்றும் அரபு லீக் அமைப்புகளில் சிரியா இடம்பெற்றிருக்கிறது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமும், நிலையற்றத் தன்மையும் முஸ்லிம் மற்றும் அரபுலகில் அமைதியைக் குலைத்துவிட்டது.

ரமலான் மாதத்தில் போர்புரிய தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமைதி காலச் சூழலை சாதகமாக்கி அரபு லீக்கும், துருக்கி மறறும் எகிப்து நாடுகளும் ஒரு மேசையின் கீழ் சிரிய அரசையும் கிளர்ச்சியாளர்களையும் அமரவைத்து அமைதிக்கு திட்டமிட வேண்டும். சிரியாவில் அமைதி ஏற்பட இந்த ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போம்.

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *