Breaking News

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி – 4 (20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.

உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று. அரபுலகில் பல நாடுகளில் இஹ்வான்களின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட கட்சிகளாகவும் குறிப்பாக எதிர்க்கட்சிகளாக விளங்கி வருகின்றன. 1928ஆம் ஆண்டு எகிப்தில் உருவான இந்த இயக்கம் சமய, அரசியல் மற்றும் சமூக இயக்கமான இதனை வீரத்தியாகி ஹஸனுல் பன்னா வார்த்தெடுத்தார்.

1928ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலக் கட்டத்தில் 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக வியாபித்தது.

அரபுலகில் செயல்பட்ட பல்வேறு மக்கள் நல இயக்கங்கள், அமைப்புகளுக்கு இஹ்வானுல் முஸ்லிமீனின் கொள்கைகள், கோட்பாடுகள் உத்வேகம் ஊட்டுபவையாக மாறின. இஹ்வான்களின் அரசியல் விழிப்புணர்வுக் கொள்கையை மட்டுமல்ல அவ்வமைப்பின் தர்ம சிந்தனையையும் தன்னகத்தே ஏற்று அறங் காவலர்களாக அரபு நாடுகளில் அமைப்புகள் விளங்கின.

ஒரு தனிநபராகட்டும், ஒரு குடும்பமாகட்டும், ஒரு சமூகமாகட்டும், அல்லது ஒரு நாடாகவே இருக்கட்டும் அனைத்துமே திருக்குர்ஆன் மற்றும் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வழிகாட்டுதல் முறைப்படியே இருக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் இஹ்வான்கள்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்பை ஆனால் அதன் உறுப் பினர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டனர்.

எடுத்துக்கட்டாக இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் என்ற பெயரில் ஜோர்டானிலும், ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற பெயரில் ஜோர்டானிலும், பாலஸ்தீனத்தில் ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற நீண்ட பெயரிலும் சுருக்கமாக ஹமாஸ் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனப் போராட்ட அமைப்பும், எகிப்தில் தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி போன்றவை இஹ்வான்களால் துவக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படும் அரசியல் கட்சிகளாகும்.

இதனைத் தொடங்கிய ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல் பன்னா என்ற ஹஸனுல் பன்னா 1906ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் பிறந்தார். 43 ஆண்டுகாலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த இவர் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆன்மீக இயலுக்கு உத்வேகம் ஊட்டுபவராக உருவெடுத்தார்.

20ஆம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் களில் ஒருவராக விளங்கினார். தலைநகர் கெய்ரோவில் வடமேற்கு பகுதியில் நைல்நதி டெல்டா பகுதியில் மஹ்மூதியா என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக வாழ்வைத் தொடங்கியவர். 13 வயதிலேயே எகிப்தை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து விடுதலை முழக்கம் எழுப்பினார். ஆங்கிலேய சாம்ராஜ்யம் அஞ்சி நடுங்கியது.

– தொடரும்…

–அபுசாலிஹ்

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *