Breaking News

இலங்கையில் சிறுமிகள் மீது பலாத்காரம்

இலங்கை நாட்டில், சிறுமிகள் மீதான செக்ஸ் தொல்லைகள் அதிகரித்துள்ளன. காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள செக்ஸ் குற்றங்களில் 80 சதவீதம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மீது நடத்தப்பட்டுள்ளன. 2009 ம் ஆண்டில் 1089 சிறுமிகளும் 2011 ல் 1189 சிறுமிகளும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 2012ன் மே மாதம் வரையில், மட்டும் 557 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதுபோல் சிறுவர்களும் அதிக அளவில் கடத்தப்படுகின்றனராம். 2010 ம் ஆண்டில் 551 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2012 மே மாதம் வரை 318 சிறார்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளிலும் சுமார் 2 முதல் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். பெரும்பாலும், உறவினர்கள், நெருங்கிய உறவினர்கள், பெற்றோர்களை பிரிந்திருக்கும் குழந்தைகள், தனியாக இருக்கும் பெண் பிள்ளைகள் தான் பலாத்காரத்துக்கு இலக்காகின்றனவாம்.

இலங்கை சட்டப்படி, சிறார்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *