Breaking News

இலங்கை விவகாரம்: தொடர்ந்து கேள்விக்குறியாகும் தமிழர்களின் எதிர்காலம்

‘‘என் பாட்டன் மண்ணை தோண்டிய போது அவருக்கு புதையல் கிடைத்ததாம்… என் தந்தை மண்ணை தோண்டிய போது அவருக்கு தண்ணீர் கிடைத்ததாம்… இப்போது நான் தோண்டுகிறேன் எனக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன…’’

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக எழுதப் பட்ட இக்கவிதை அழாத நெஞ்சையும் அழ வைக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்ட இலங்கை தமிழர்கள் ஒழிப்பு நடவடிக்கை இன்றளவும் தொடர்ந்து மத்திய அரசின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரால் ஆரத்தி எடுத்து ஆரம்பிக்கப்பட்டது. அப்பாவி தமிழர்களின் நிலம், உடைமை, மானம் என அனைத்தும் சூறையாடப்பட்ட நிலையில் தற்போது சிங்கள ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

தமிழர்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித் தேன் என்று கூறிய கலைஞர் தனது இரண்டு மணி நேர உண்ணா (?) விரதத்தில் கொத்துக் குண்டுகள் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இனி வீசப்படாது என்கிற வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் மட்டும் பெற்று தனது மகத்தான உண்ணாவிரதத்தை தனது ஆட்சியில் நிறைவு செய்தார். டி.ஆர்.பாலு, தொல் திருமாவளவன், கனி மொழி என எம்.பிக்கள் புடை சூழ இலங்கை சென்று தமிழர்கள் முள்வேலிகளுக்கிடையில் தமது துன்பியல் வாழ்வைக் கழித்து வருகின்றனர் என்கிற தகவல் பதிவு செய்த பின்னரும் தமிழர் களின் வாழ்வைக் காப்பார் யாரு மில்லை.

தற்போது ‘டெசோ’ எனும் பெயரில் புதிய அமைப்பொன்றை நிறுவி அவ்வப்போது வீரமணி, சுப. வீரபாண்டியனுடன் உரை யாடிக் கொண்டிருக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற முதல் சட்டமன்ற தொடரிலேயே இலங்கை அரசிற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்த தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசையும் கடுமையாக சாடினார்.

ஆனால் தற்போது நாள்தோறும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், கொல்லப் படுவதும் செய்தியாகின்ற வேளையில் ஜெயலலிதா, கருணாநிதி போல் மத்திய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டி ருக்கிறார்.

இச்சூழ்நிலையில் தற்போது தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் இனி சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி தமிழகத்தில் வழங்கப்பட மாட்டாது எனவும் பெங்களூரில் வைத்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித் துள்ளார்.

ஏற்கெனவே இடிந்த கரை மக்கள் உதயகுமார் தலைமையில் தீவிரமாக போராடிய பின்னரும் தொடர்ந்து அம்மக்களை ஒடுக்கி கூடங்குளம் ஹிμமி! நிலையத்தை முன்னின்று திறக்கச் செய்த அதே நாராயணசாமிதான் இலங்கையில் மீதமுள்ள தமிழர்களை கொலை செய்வதற்கு தற்போது பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் ஒப்பந்தப்படி இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிற கருத்தையும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

–புதுமடம் அனீஸ்

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *