Breaking News

இந்தியாவை சீண்டும் ஒபாமா!

அன்னிய முதலீடு தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் கவலை அளிப்பதாகவும், இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமானால் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறியிருக்கிறார் ஒரு பிரபலப் புள்ளி.

அதோடு ‘‘இந்தியாவில் அன்னிய முதலீட்டுக் கொள்கை கவலை அளிக்கும் வகையில் உள்ளது; குறிப் பாக சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் இந்தியா கடும் கட்டுப்பாடுகளைக் கொண் டுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க, வெளிநாட்டு முதலீடுகளை தாராள மாக அனுமதிக்க வேண்டும். இதற்காக கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார் அந்த பிரபலப் புள்ளி.

இவ்வாறு கூறியிருப்பவர் அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தான். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா குறித்த தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி யுள்ளார்.

இந்தியப் பொருளாதாரக் கொள்கை தாராளமயத்தை நோக்கி திசைதிரும்பியபோது, இனி நாம் வளர்ச்சிப் பாதையை நோக்கி வீறுநடை போடுவோம்; அதன் வேகத்திற்கு யாராலும் தடைபோட முடியாது என பரபரப்பாகப் பேசப்பட்டது. வளர்ச்சியின் வேகம் அதிகரித்ததாக சில புள்ளி விவரங்களும் மேற்கோளாக காட்டப்பட்டன. ஆனால், அந்த வளர்ச்சி எல்லாம் உண்மையில் வளர்ச்சி அல்ல, அவை வெறும் வீக்கம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தியாவைப் பற்றி அமெரிக்க அதிபரின் கருத்து அமைந்துள்ளது.

ஒபாமாவின் பேச்சில் இந்த நிலையிலும் இந்தியா பொருளாதாரத்தில் தன்நிலை தாழாமல் நிமிர்ந்து நிற்பது அவருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகனை தனது நெருங்கிய நண்பர் என்றும், தானும் அவரும் ஒன்றாகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்த ஒபாமா, அமெரிக்கர் களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப்பறிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதையும் அவரது கருத்து உணர்த்துகிறது.

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பற்றி முடிவு செய்யப்படும் இடம் இந்தியாவாக இருக்கக்கூடாது. இன்டியானாவாக (அமெரிக்காவின் ஒரு பகுதி) அது இருக்கவேண்டும் என கடுகடுப்புடன் கூறியுள்ளார். இந்தியா சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என பட்டவர்த்தனமாகவே அமெரிக்க நலனுக்கு ஆதரவாகவும், இந்திய நலனுக்கு விரோதமாகவும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1991ஆம் ஆண்டு இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து இந்தியாவை தாராளமய பொருளாதாரக் கொள் கையை நோக்கி அழைத்துச் சென்ற மன்மோகன் சிங்கை மட்டும் பாராட்டிவிட்டு, இந்திய அரசு மீது தனக்குள்ள உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார் ஒபாமா. மொத்தத்தில் ஒபாமாவின் கருத்துக் களை கவனத்தில் கொண்டு அதற்கு நேர்மாறான நிலைபாட்டை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதுவே இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க தொடர்ந்து முயற்சிக்கும் மத்திய அரசிற்கு போராட்டங்கள் மூலம் முட்டுக் கட்டைப் போடும் மக்கள்நல இயக்கங்களைப் பாராட்டுவோம். இந்தியா குறித்த தங்களது கண்ணோட்டத்தை வெளிப்படையாக அறிவித்து இந்தியர்களின் தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்து பரிசீலனை சிந்தனைக்கு வழிவகுத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் பாராட்டுவோம்.

Check Also

காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து

அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *