Breaking News

வளர்ந்து வரும் வக்கிரக் குணம்

இன்றைய இந்திய சமூகத்தில், பெண்களுக் கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக் கிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான சீண்டல்கள், பாலியல் தொல்லைகள் அதிகரித் துள்ளன. பெண்களைத் துன்புறுத்திப் பார்க் கும் வக்கிரக் குணம் ஆண் சமூகத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 10 அன்று அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி நகரின் மது விடுதி ஒன்றின் வெளியே 20 வயதே ஆன இளம் பெண் ஒருவரை பலர்கூடி மானபங்கம் செய்திருக்கின்றனர். இந்தக் காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிபரப்பியிருக்கிறது.

இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி யாளர் கவ்ரவ் ஜோதி நியோக் என்பவர்தான் கூட்டத்தைத் தூண்டிவிட்டு அப்பெண்ணைத் தொந்தரவு செய்யச் செய்தார் என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அன்னா ஹசாரே குழுவில் இடம்பிடித்துள்ள அகில் கோகாய் காவல்துறையிடம் அளித்திருக்கிறார். அஸ்ஸாம் மின்ஊடக கழகத்தின் உறுப்பின ராக இருந்தவர் கவ்ரவ் ஜோதி நியோக். தற்போது அந்தக் கழகத்தின் உறுப்பினர் பதவி யில் இருந்து வெளியேறி விட்டார். குற்றவாளிகளை அடையாளம் காட்டத்தான் படம்பிடித்தேன் என்கிறார் நியோக். எனினும் அவர் பணிபுரிந்த ழிமீஷ்s லிவீஸ்மீ நிறுவனம் அவரைப் பணியில் இருந்து நீக்கியிருக்கிறது. ஒளிபரப்பான காட்சியில் இருந்து காவல் துறை, குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் காட்டவே படம்பிடித்தேன் என்று நியோக் கூறுவதை ஏற்க முடியாது. பரபரப்பு செய்திகளால் தொலைக்காட்சியை முதலிடத்தில்க¢கொண்டு வரவும் நிறுவனத் திடம் நல்லபெயர் வாங்கவும் செய்தி நிருபர்கள் தொடர்ந்து சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகிளா முக்தி சங்கரம் சமிதி உள்ளிட்ட பெண்கள் அமைப்பினர் தொலைக்காட்சி நிறுவனத்தைக் கண்டித்து அதன் முன்னர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான சலனப்படக் காட்சி வட்டை (ஞிக்ஷிஞி) பெண்களுக்கான தேசிய ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்μக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளன. சுற்றி நின்றவர்கள் அப்பெண்ணை சிகரெட்டுகளால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இச்சம்பவம் பரபரப்படைந்ததால் முதலமைச் சர் தருண் கோகாய் நேரடியாகத் தலையிட்டு, அந்நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச் சருக்கும் காவல்துறை இயக்குனருக்கும் உத்தர விட்டுள்ளார். ஆனால் காவல்துறை இயக்குனர் ஜெயந்தோ என்.சௌத்திரி, ‘‘சம்பவம் நடக்கும்நேரம் அந்த இடத்தில் இருப்பதற்கு காவலர்கள் ஒன்றும் கிஜிவி இயந்திரம் அல்ல’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, ஜூலை 14 அன்று, அஸ்ஸாமில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டத்தில் நிவாரணப் பணிக்காக ராணுவம் சென்றது. அங்குள்ள டோல்டா வனப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை சில ராணுவ வீரர்கள் காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்றுள்ளனர். அந்தப் பெண் கூச்சல் போட்டதும் அங்கிருந்த கிராம மக்கள் அந்தப் பெண்ணை ராணுவ வீரர்களிடமிருந்துமீட்டுள்ளனர். மற்றவர்கள் ஓடிவிட, பிடிபட்ட ராணுவ வீரர் சுனில்குமார் உபாத்யாயா செம்மையாக கவனிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ராஜ்குமார் (திமுக), தன் வீட்டில் பணிப்பெண்ணாக வந்த 14 வயதே ஆன சத்யா என்ற கேரளப் பெண்ணை பாலியல் பலாத்க £ரம் செய்து, நஞ்சூட்டி கொலை செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாமில் 2007 நவம்பரில் லெட்சு ஓரன் என்ற பெண், பழங்குடியினரின் உரிமைக் கான பேரணியில் கலந்துகொள்ளச் சென் றார். அப்போது அவர் ஆடை உரித்து அவ மானப்படுத்தப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட் டார். அவர் நிர்வாணமாக ஓடும் படம் வெளியாகி பின் கவுகாத்தியில் கலவரம் வெடித்தது. பெண்களைத் துன்புறுத்துபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறும் அவருக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. அஸ்ஸாம் மாநில சட்டமன்ற பெண் உறுப்பி னர் ரூமிநாத், தன் முதல் கணவனை விட்டுவிட்டு ஆண் தோழன் ஜாஹிர் உசேனுடன் கடந்த மாதம் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். கரீம்கஞ்ச் நகரில் ஒரு கும்பல் இருவரையும் கொடூரமாகத் தாக்கியது.

2011ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளதில் அஸ்ஸாம் இரண்டாம் இடம் வகிக்கிறது. பெண்களுக்கு எதிராக 37 சதவீத குற்றங்கள் அங்கு நடந்துள்ளன. 2010ல் 33.5 சதவீதமாக இருந்தது. 2008ல் 27 சதவீதமாக இருந்தது. வருடந்தோறும் இது அதிகரித்து வருகிறது.

2010ல் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 2 லட்சத்து 28 ஆயிரத்து 650 குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் அஸ்ஸாமில் மட்டும் 11,503 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த தகவல்களை தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் மது விடுதிக்கு விருந்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அப்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரப்படுகிறது. ஆனால் இரவு விருந்து எனும் தீய கலாச்சாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று யாரும் கோருவதில்லை. நட்சத்திர விடுதி, இரவு விடுதிகளில் வருடந்தோறும் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது. இந்த விடுதிகளில் இருந்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்பதாலும், காவல் துறையினருக்கும் கணிசமாக மாமூல் கிடைக் கிறது என்பதாலும் இந்தக் கலாச்சாரம் கண்டு கொள்ளப்படுவதில்லை.

அப்பெண் தாக்கப்பட்டத்தை ஊர்கூடி வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள். கயவர் களைப் பிடிக்க வேண்டும் என்றோ, பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றோ யாருக்கும் தோணவில்லை. வலைதளங்களிலும் திரைப்படங்களிலும் பெண்ணின் ஆபாசங் களைக் கண்டு ரசிப்பவர்களுக்கு நேரில் காμம் வாய்ப்பு கிடைத்ததால் செயலற்று நின்றார் கள் போலும். சாலையைக் கடந்துசென்ற யாரோ காவல்துறைக்கு தகவல் கொடுக்க, பின்னர் காவல்துறை வந்தே பெண்ணைக் காப்பாற்றி யிருக்கிறது. செய்யும் முஹம்மது ஹபிசுதீன் என்பவனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறான். சலனப் பட ஆதாரங்களை வைத்தே காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்து வருகிறது. பிள்ளைகள் என்ன மனநிலையில் வளர்க்கப் படுகிறார்கள் என்ற கேள்வி நம்முன் உள்ளது. சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. பெண்கள் ஆபாசப் பொருளாக பார்க்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து கூக்குரல் எழுப்பப்பட்டும் அது யார் காதிலும் சேர்வதாக இல்லை.

“”நவீனக் கல்வி, மேலை நாகரீகம், அதிக வருவாய், ஆண் பெண் உறவு போன்ற புதியன புகுந்தனவால் இந்திய சமூகத்தில் வக்கிரப்புத்தி வழிந்தோடுகிறது.””

 

–ஜி.அத்தேஷ்

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *