Breaking News

மீண்டும் துணை ஜனாதிபதியாகிறார் ஹமீது அன்சாரி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் திட்ட ஆணையத்தின் (Planning Commission) தலைவராகவும் இருந்து வருகிறார் ஹமீது அன்சாரி. இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 7ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 19 அன்று ஜனாதிபதியையும், ஆகஸ்ட் 7ஆம் தேதி துணை ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று முடிவாகிவிட்டது. வாக்குகளின் எண் ணிக்கையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் பிரணாபின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஜனாதி பதிக்கான தேர்தலில் நாடாளுமன்றத்தின் மேல்சபை, கீழ்சபை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர்.

துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் நாடாளு மன்றத்தின் மேல்சபை, கீழ்சபை உறுப்பினர்கள் மட்டும் வாக்களிப்பர். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அதிகமான வாக்குகள் உள்ள தால் துணை ஜனாதிபதி தேர்தலிலும் காங்கிரஸ் பரிந்துரைக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இப்போது துணை ஜனாபதியாக இருந்துவரும் ஹமீது அன்சாரியையே மீண்டும் தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. அன்சாரியும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

75 வயதாகும் அன்சாரி ஒரு தோந்த ராஜ தந்திரி. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முதல் இரண்டு முறை இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் (1952-1962). இவருக்குப் பின்னர் இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பை அன்சாரி பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகள்தான் அன்சாரியைப் பரிந்துரை செய்திருந்தன. இப்போது அவர் காங்கிரசின் நம்பிக்கைக்குரியவராகி விட்டார். அன்சாரி அரசியல் சார்பற்றவர் என்பது கூடுதல் சிறப்பு.

மம்தா பானர்ஜி தவிர கூட்டணியின் அனைத்துக் கட்சியினரும் அன்சாரியை ஆதரித்துள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்றத்தின் தலைவரும் ரயில்வேத்துறை அமைச்சருமான முகுல்ராய், மாற்று வேட்பாளர்களை அறிவித்தார். மேற்கு வங்கத்தில் முன்னர் ஆளுனராக இருந்த கோபால கிருஷ்ண காந்தியை அல்லது கிருஷ்ணா போஸை துணை ஜனாதிபதியாகக் கொண்டு வரலாம் என்று கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரியின் மகன் சிசிர் போஸின் மனைவிதான் கிருஷ்ணா போஸ். திரிணாமூல் காங்கிரசின் மாற்று வேட்பாளர் யோசனையை சோனியா காந்தி ஏற்கவில்லை.

பிரதீபா பாட்டீலுக்குப் பின்னர் ஜனாதி பதி பதவிக்கு ஹமீது அன்சாரியைத்தான் காங்கிரஸ் முன்வைத்தது. மம்தா பானர்ஜி யின் எதிர்ப்பால்தான் அன்சாரி பின் இழுக்கப் பட்டார். அதனால் காங்கிரஸ், துணை ஜனாதிபதிக்கு அன்சாரியை ஆதரிப்பதில் பிடிவாதமாக இருக்கிறது. பாரதீய ஜனதா இறுதியாக ஜஸ்வந்த் சிங்கை எதிர்வேட்பாளராக களமிறக்கியுள்ளது. முஹம்மது அலி ஜின்னாவைப் பாராட்டி புத்தகம் எழுதி சர்ச்சையில் சிக்கியவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பேயி அரசில் நிதி அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர். எனினும் அவர் தோற்பது உறுதியாகிவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியது பாரதீய ஜனதா. ஆனால் துணை ஜனாதிபதி விஷயத்தில் சுதாரித்துக் கொண்டு ஜஸ்வந்த் சிங்கை முடிவு செய்துள்ளது.

இரு அவையிலும் சேர்த்து மொத்தம் 790 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த முறை தேர்தலில் அன்சாரி 455 வாக்குகளைப் பெற்றார். பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் அவரை எதிர்த்து நின்ற நஜ்மா ஹெப்துல்லாஹ் 222 வாக்குகள் பெற்றார். வெற்றிபெறத் தேவையான 396 வாக்குகளைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் இம்முறை காங்கிரசுக்கு உள்ளது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 186 வாக்குகளே உள்ளன. திரிணாமூல் காங்கிரசுக்கு இரு அவையிலுமாக சேர்த்து 28 உறுப்பினர்கள் உள்ளனர். திரிணாமூல் நீங்கினாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியே சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் ஆதரிப்பதால் சென்ற முறையைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் அன்சாரி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி

காங்கிரஸ் 278

பகுஜன் சமாஜ் கட்சி 36

சமாஜ்வாடி கட்சி 31

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 27

திமுக 25

தேசியவாத காங்கிரஸ் 16

ராஷ்ட்ரீய லோக்தளம் 5

ராஷ்ட்ரீய ஜனதாதளம் 5

தேசிய மாநாட்டுக் கட்சி 5

இதுதவிர பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக், AIMIM, AIUDF, கேரளா காங்கிரஸ் (மாணி), விடுதலை சிறுத்தைகள், SDF,BVA, NPF, சுவாபிமான் ரக்ஷா ஆகிய கட்சிகளும் அன்சாரிக்கு ஆதரவு தருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பாரதீய ஜனதா 163

ஐக்கிய ஜனதா தளம் 29

சிவசேனா 15, அகாலிதளம் 7

ஜார்.மு.மோர்ச்சா 3

ஹரியானா ஜன்ஹித் கட்சி 1

ஆகிய கட்சிகள் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாக உள்ளன.

இவைதவிர பிஜு ஜனதாதளம் 21, அதிமுக 14 ஆகிய இரண்டு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை ஆதரித்த போதிலும், துணை ஜனாதிபதி தேர்தலில் இன்னும் முடிவு அறிவிக்கவில்லை.

 

–ஜி.அத்தேஷ்

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *