Breaking News

Daily Archives: July 24, 2012

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அன்மையில் துபாயில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆறுதல் கூறினார். மனிதாபிமானமற்ற இச்செயலை செய்த அமெரிக்க படையினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரும் வரை ஓய மாட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க மாண்புமிகு முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார்.

Read More »

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம்

மண்டபம் ஒன்றியம் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம் 23/ 07/ 2012 பகல் 12.30 மணியளவில் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தர்வேஷ் தலைமை தாங்கினார். பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பேட்ரிக் வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி பணிகள் …

Read More »

காஷ்மீரில் இதுவரை கைப்பற்றிய ஆயுதங்கள்

ஜம்மு – காஷ்மீரில் 1990ம் ஆண்டு முதல் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்த 22 வருடங்களில் 31 ஆயிரம் ஏ.கே. ரக துப்பாக்கிகளும், 11500 இதரவகை துப்பாக்கிகள், 1500 இயந்தர துப்பாக்கிகள், 400 குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

Read More »

உலக விளைநிலம் வர்த்தகத்தில்…

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விளைநிலங்களில் முதலீடு செய்வது தொடர்பாக சர்வதேச புள்ளிவிபரம் ஒன்றை வாஷிங்டனைச் சேர்ந்த Matrix Project Land என்ற ஆய்வுக்குழு வெளியிட்டிருக்கிறது.

Read More »

திருப்பதி – மதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

ராமநாதபுர மக்களின் பல நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியாலும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வாரம் இரு முறையிலிருந்து வாரம் மூன்று முறையாக சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மதுரை-திருப்பதி விரைவு ரயிலினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர். எஸ். சுந்தர்ராஜ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், …

Read More »