Breaking News

கற்றுத் தருபவர்களே கட்டுப்பாட்டை மீறலாமா?

பள்ளிக் கூட ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வரவேண்டும். கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் டி-ஷர்ட் என்ற பனியன் ஆடையையும், ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்கள் அணியவும் தடை விதிக்கப்படுகிறது. பொதுவாகவே மாணவ, மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு கல்விக் கூடங்களில் போடப்பட்டு இருந்தாலும் சில கல்விக் கூடங்களில் சரிவர பின்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்ததைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு பேண வேண்டும் என்பது மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே ஆடை கட்டுப்பாட்டை மீறுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இது நிச்சயம் கவலைக்குரிய ஒன்று என்பதில் ஐயமில்லை.

மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்கும் இருபாலர் பள்ளிகளில் ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டு கள் போட்டுக் கொண்டு வருவதாகவும் – ஆசிரியர்கள் கவர்ச்சி வாசகங்கள் பொறித்த டிஷர்ட் அணிந்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் பெருகப் பெருக பள்ளிக் கல்வித்துறை ஆடைக் கட்டுப்பாடு குறித்து கடுமையான உத்தரவுகள் போடப்பட்டது.

ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும். ஆசிரியர் வேட்டி சட்டை அல்லது பேண்ட் அணியலாம். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட், வாசகங்கள் பொறிக்கப்பட்ட பனியன் போன்ற ஆடைகள் ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியைகள் புடவை அணிகிறார்கள். ஆனால் அணியக் கூடிய புடவைகள் கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். உடல் பாகங்கள் தெரியாவண்ணம், மெல்லிய ஆடையாக இல்லாமல் உறுதியான புடவைகளை அணிய வேண்டும். ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகளை கண்டிப்பாக அணியக்கூடாது என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய கல்வித் துறையின் செயல் பாராட்டுக்குரியது.

ஆசிரியர்களின் ஆடைக் கட்டுப்பாடும், மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடும் சரிவர பேணப்பட்டால் சமுதாயம் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *