Breaking News

தொண்டியில் நடந்த கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட தமுமுக – மமக சார்பில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் படிக்க உதவி செய்யும் விழா நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் M. சாதிக் பாட்சா தலைமை வகித்தார். தமுமுக மாணவர் அணி மாவட்ட செயலர் அன்வர், மாவட்ட பொருளர் வானி சித்திக், மமக மாவட்ட செயலர் ஜாகிர் உசேன், மமக மாவட்ட செயலர் வழக்கறிஞர் பாலா, தமுமுக மாவட்ட துணைச்செயலர் பசீர் அஹமது, தமுமுக மாவட்ட துணைச் செயலர் செய்யது காசிம் மரைக்காயர், மமக மாவட்ட துணைச்செயலர் அஜிஸ் ரகுமான் ஆகியோர் கல்வியின் அவசியத்தை பற்றி பேசி காசோலை வழங்கினர்.

பாண்டுகுடி வினோத்குமார் என்ற மாணவனுக்கு 15,000, தொண்டி முஹம்மது இக்பால் 12,000 சரண்யா தேவி என்ற மாணவிக்கு 10,000, சுந்தர ஐஸ்வர்யா 7500, முஹம்மது ஜியாவுல் ரகுமான் 25000, சமிரா பாத்திமா மேரி தேவிப்பட்டினம் 11000, செய்யது சுல்தான் 10000, ராவியத்துல் பசரியா வலசை 11000, செய்யது அபுதாகிர் 10000, முஹம்மது வாசிம் ராஜா 10000, முஹம்மது யூசுப் 12000, தொண்டி பாருக் அலி 10000, முஹம்மது இபுராஹிம் ஆனந்தூர் 10000, ரூபியா சரபியா நம்புதாளை 10000 ஆகிய 14 மாணவ, மாணவிகளுக்கு 1,65,500 மட்டும் வழங்கப்பட்டது. மாணவர் இநதியா மாவட்ட செயலர் கலந்தர் ஆசிக் நன்றி கூறினார்.

 

Check Also

திருச்சி பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி

தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் பீமநகர் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான கல்வி கல்வி உதவி மற்றும் கல்வி ஊக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *