Breaking News

Daily Archives: July 19, 2012

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு …

Read More »

குன்னத்தூரில் மார்க்க விளக்க கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் கிளை தமுமுக சார்பாக மார்க்க விளக்க கூட்டம் 17.07.12 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கோவை செய்யது சிறப்புரை ஆற்றினார்.

Read More »

கற்றுத் தருபவர்களே கட்டுப்பாட்டை மீறலாமா?

பள்ளிக் கூட ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்து வரவேண்டும். கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – கல்வி உதவித்தொகை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் சிறுபான்மை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வயிகட்டல் முகாம் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வயங்கபட்டது. மேலும் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக வருமானச்சான்று மற்றும் சாதி சான்று ஆகியவை தமுமுக செய்யாறு நகர அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்டசெயலாளர் H.ஜமால்,  தமுமுக மாவட்ட துணை செயலாளர் S.அப்பாஸ்,  நகர தலைவர் I.லதிப் …

Read More »

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது பேராசிரியர் அவர்கள், நாடாளுமன்றத்தில் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை …

Read More »

தொண்டி பொது சேவை மையம் – அரசின் முதியோர் உதவித்தொகை

தொண்டி தமுமுக நடத்தும் தொண்டி பொது சேவை மையத்தில் தொண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த முப்பது முதியோருக்கு அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று கொடுக்கப்பட்டது.

Read More »

தொண்டியில் நடந்த கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்ட தமுமுக – மமக சார்பில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் படிக்க உதவி செய்யும் விழா நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் M. சாதிக் பாட்சா தலைமை வகித்தார். தமுமுக மாணவர் அணி மாவட்ட செயலர் அன்வர், மாவட்ட பொருளர் வானி சித்திக், மமக மாவட்ட செயலர் ஜாகிர் உசேன், மமக மாவட்ட செயலர் வழக்கறிஞர் பாலா, தமுமுக மாவட்ட துணைச்செயலர் பசீர் அஹமது, தமுமுக …

Read More »

மத்தியப் பிரதேசத்தில் பரிதவிக்கும் சிறுபான்மையினர் – பகுதி 2

மதவெறி காவி அமைப்புகள் மக்களைப் பிளவுபடுத்துவதோடு அதிகாரத்தையும் சுவைத்துக் கொண்டிருக்கும் போது காங்கிரஸை அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்த்த ஒரு சமுதாயத்தை சட்டப்பூர்வமாகக் கூட பாதுகாக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கவே இல்லை. அரசியல் பின்புலம் இல்லாததால் முஸ்லிம்கள் எளிதாக வேட்டையாளப்பட்டார்கள். காவல் துறையினரின் சித்திரவதைகள் நினைத்தாலே கலங்கித் தவிக்கும் அளவு வேதனை அடைந் தனர்.

Read More »