Breaking News

சாதி அரசியலுக்குள் சிக்கிய பாரதீய ஜனதா

இந்துக்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையே பகையை வளர்த்து அதில் முளைவிட்டதுதான் பாரதீய ஜனதா கட்சி. இன்று அக்கட்சி, சாதி அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கிறது.

ராஜஸ்தானில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வந்தது பாரதீய ஜனதா. அம்மாநிலத்தின் குஜ்ஜார்களும், ஜாட்டுகளும் இரு பெரும் சாதி பிரிவுகள். அரசின் நலன்களை எல்லாம் ஜாட்டுகள் அனுபவித்து வந்தனர். இதனால் குஜ்ஜார்கள் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர். இப்போ ராட்டத்துக்கு எதிராக ஜாட்டுகள் கலவரம் செய்தனர். குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பிடிவாதம் காட்டினர். குஜ்ஜார்களின் போராட்டம் வலுத்ததால் வேறு வழியின்றி ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசு 2008ல் குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது.

அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது. அதுபோல், இப்போது கர்நாட காவிலும் பாரதீய ஜனதாவிற்கு பிரச்சனை வெடித்திருக்கிறது. பாரதீய ஜனதா முதன்முறையாக கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க, எடியூரப்பா கர்நாடகாவின் முதல மைச்சர் ஆனார். அவர் மீது சுரங்க ஊழல் முதல், குடும்பத்தினருக்கு அரசு நிலங்களை மலிவான விலை யில் விற்றதுவரை பல வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகள் சம்பந்த மாக எடியூரப்பா கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது அவருக்கு பதிலாக சதானந்தா கௌடாவை பாரதீய ஜனதா முதல்வராக்கியது. எடியூரப்பா இப்போது ஜாமினில் வெளியே வந்துவிட்டார். இப்போது கௌடாவை இறக்கிவிட்டு தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தர வேண்டும் என்று அடம்பிடித்தார்.

பாரதீய ஜனதா தலைமை அதை ஏற்கவில்லை. எடியூரப்பாவை பலவாறாக சமாதானப்படுத்திப் பார்த்தது. அவர் மசியவில்லை. தனக்கு இல்லாவிட்டாலும் தனது சாதிக்காரர் ஒருவர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். எடியூரப்பா லிங்காயத் துகள் சாதியைச் சேர்ந்தவர். லிங்கா யத்துகள் கர்நாடகாவின் பிரதான சாதியினர். பாரதீய ஜனதாவில் பலரும் இந்த லிங்காயத்துகள்தான். இப்போது வேறு வழியின்றி, சதானந்தா கௌடாவை இறக்கிவிட்டு லிங்காயத்துக்காரரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க பாரதீய ஜனதா முடிவு செய்துவிட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி சதானந்த கௌடா பொறுப்பேற்றார். ஒருவருடம் பூர்த்தியாக இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில் அவரை கட்சித் தலைமை வலுக்கட்டயாமாக பதவி இறக்கியிருக்கிறது. நிதின் கட்காரியிடம் கௌடா ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார். தான் காலைவாரி விடப்பட்டதை சூட்சுமமாகவும் கௌடா குறிப்பிட்டுள்ளார். கௌடாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டு, ஜெகதீஷ் ஷெட்டரை அடுத்த முதல்வராகவும் கட்காரி அறிவித்தார்.

கர்நாடகாவின் மற்றொரு சாதி யான ஒக்கலிக்கர் சமுதாய மக்களை திருப்திபடுத்த, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அசோக் என்பவரை துணை முதல்வராக்கவும் பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளதாம். இவ்வாறாக சாதி பிரிவுக்கும் சிக்கிக் கொண்டு கர்நாடகத்தில் பாரதீய ஜனதா திக்குமுக்காடுகிறது.

வேட்பாளர்களையும், எம்.எல். ஏ.க்களையும், எம்.பி.க்களையும், முதல்வர்களையும், பிரதமர்களை யும், ஜனாதிபதிகளையும் கட்சிகள் முடிவு செய்துகொள்கின்றன என் றால் இங்கு நடப்பது மக்களாட்சி என்பதா இல்லை கட்சி ஆட்சி என்பதா?

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *