Breaking News

நெல்லை வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

நெல்லை மேற்கு மாவட்டம் சாம்பவர் வடகரையில் தமுமுக கிளையின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் 5.07.2012 அன்று நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். 20 பேருக்கு லென்ஸ் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்ட தலைவர் S. மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் A. நயினார் முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் M. திவான் மைதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M. முஹம்மது யாகூப், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது ஷரீப் மற்றும் கிளை நிர்வாகிகள் காஜா மைதீன், அப்துல் காதர், செய்யது முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ சேவை அணி கிளை செயலாளர் அசன் மீரான் நன்றி கூறினார்.

தமுமுக மருத்துவ சேவை அணியின் இரத்த தான சேவையையும், ஆம்புலன்ஸ் சேவையையும் பாராட்டி லயன்ஸ் கிளப் அரிமா சங்கத்தின் சார்பாக அவார்டு வழங்கப்பட்டது. அவார்டை தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M. முஹம்மது யாகூப் பெற்றுக் கொண்டார்.

 

Check Also

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *