Breaking News

கலாம்-சோனியா: முடிவுக்கு வந்த சர்ச்சை!

2004ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இருந்த வேளையில், சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. காங்கிரஸ் கட்சி சோனி யாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்திய மக்களும் வரவேற்றனர். ஆனால் பாரதீய ஜனதா, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள், சோனியா பிரதராகக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தன. சோனியா வெளிநாட்டுக்காரர், அன்னிய சக்தி என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.

 

ராஜீவ் காந்தியை மணம் புரிந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சோனியா காந்தி இன்றுவரை இந்தியாவில்தான் இருக்கிறார். சோனியா காந்திக்கு இந்தியக் குடியுரிமை உள்ளது. எனவே சோனியா காந்தி பிரதமராக விரும்பினால், அரசியல் சாசன சட்டத்துக்கு உட்படும் குடியரசுத் தலைவர் அவரது விருப் பத்தை நிராகரிக்க முடியாது. அன்றைய பொழுது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவர் தனது ஜனாதிபதி பதவிகால அனுபவங்களை ‘Turning Point’ (திருப்புமுனை) என்று பெயரிட்டு நூல் எழுதியிருக்கிறார். Harper Colling என்ற பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது.

இந்த அனுபவக் குறிப்பில் அப்துல் கலாம், ‘சோனியா காந்தி அன்றைய நாளில் பிரதமராக விரும்பி கேட்டிருந்தால் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பேன்’ என்று குறிப் பிட்டிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித் திருக்கும் அப்துல் கலாமின் மூத்த ஆலோசகர் வி.பொன்ராஜ், பெரும்பான்மைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவரது விருப்பத் துக்கு மரியாதை செய்வது ஒரு குடியரசுத் தலைவருக்கு அரசியல் சட்டக் கடமையாகும். சோனியா காந்தி கேட்டிருந்தால், இந்தியா வின் குடிமகளாக இருக்கும் சோனி யாவின் விருப்பத்தை அப்துல் கலாம் மறுத்திருக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார்.

சோனியாவின் குடியுரிமையை உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தி யிருந்த போதிலும், சோனியா பிரதமராக் கூடாது என்று கருதிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றவர்களும் அப்துல் கலாமுக்கு கடிதங்கள் மூலமும், தொலை பேசி வழியாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் நெருக்கடி கொடுத் தனர். அவர்களுக்கெல்லாம் கலாம் முறையான பதில்களை அனுப்பி னார். மேலும் சோனியா காந்தியின் கோரிக்கையை ஏற்கவும் தயாராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது பிரதம வேட்பாளர் குறித்து கலாம் கடிதம் எழுதவோ, ஆலோசனைக் கூறவோ இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

கலாம், காந்தியைப் போல் வெளிப்படையாக அன்றே பேசாமல், உண்மையை மறைத்து வைத்து இப்போது கூறுவது ஏன்? சூழ்நிலைக்கு ஏற்ப கலாம் பேசுகிறார் என்றெல்லாம் சரத் யாதவ் கரித்துக் கொட்டியிருக்கிறார். சோனியாவை பல்வேறு காரணங்களுக்காக வெறுக்கும் பலருக்கும் அப்துல் கலாமின் இந்தக் கருத்து கசப்பாக இருக்கக்கூடும். கலாம் மக்கள் மதிப்பை இழந்துவிட்டதாக பால் தாக்கரே பாய்கிறார்.

ஆனால், அப்துல் கலாம் தனது அனுபவக் குறிப்பில் இதனைக் குறிப்பிட நியாயமான காரணம் உண்டு. 2004ஆம் ஆண்டு பிரதம வேட்பாளர் குறித்து சோனியா காந்தி அப்துல் கலாமை சந்திக்கச் சென்றபோது அப்துல் கலாம் சோனியாவிடம், பிரதமர் பதவி ஏற்பதில் இருந்து விலகும்படி கேட்டுக் கொண்டதாக ஒரு வதந்தி கிளப்பப்பட்டது. அதன் பிறகுதான் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கும் முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டது. இந்தச் செய்தி அப்போதே பொய் என்று விளங்கினாலும் மறுப் பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் இச் சம்பவம் குறித்து குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமோ, சோனியா காந்தியோ வெளிப்படையாகக் கூறவில்லை.

குடியரசு மாளிகைக் குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் கலாமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டத்துடன் இந்த வதந்தி பரப்பிவிடப்பட்டது. இவ் வாறுதான் மக்கள் இதுவரை நம்பி வந்துள்ளனர் என்கிறார் தாக்கரே. பாரதீய ஜனதாவால் குடியரசுத் தலைவராகக் கொண்டுவரப்பட்டவர் கலாம் என்று தப்பான அபிப்ராயம் மக்களிடம் இருந்து வந்ததால், பாஜகவின் விருப்பத்திற்கேற்ப சோனியா காந்தி பிரதமராவதை அப்துல் கலாம் தடுத்திருப்பார் என்று நம்பவும் இடமிருந்தது. இந்த சர்ச்சைக்குத்தான் இப்போது அப்துல் கலாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘சோனியா காந்தி விரும்பியிருந்தால் அவரை பிரதம ராகப் பதவிப்பிராணம் செய்துவைக்க நான் தயாராக இருந்தேன்’ என்று எழுதியிருக்கிறார். இன்னொன்றும் குறிப்பிட்டிருக்கிறார். குஜராத் இனப்படுகொலைகள் நடந்த இடங்களை தான் பார்வையிடச் சென்றதை அன்றைய பிரதமர் வாஜ்பாய் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், 10 ஆண்டுகள் நீடித்து வந்த ஒரு பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அப்துல் கலாம்.

 

–ஜி.அத்தேஷ்

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *