தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 03.07.2012 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
கும்பகோணம் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் D. அருள்செல்வன் சிகிச்சை வழங்கினார். தமுமுக மாவட்ட தலைவர் G. முஹம்மது செல்லப்பா தலைமை வகித்தார். ஆவூர் ஜமாஅத் தலைவர் ஜனாப் A.M. ஹசன் பஷீர் முகாமை துவக்கி வைத்தார். ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர் K. ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் S. சந்திரா சாமிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கிளை தலைவர் M. முஹம்மது ஹாலித் நன்றியுரை கூறினார். இதில் மாவட்ட கிளை நிர்வாகிகளும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.